Coffee Side effects: வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன?

வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

coffee in morning

நம்மில் பலருக்கும் தினசரி காலையில் காபி குடித்தால் நல்லதா அல்லது டீ குடித்தால் நல்லதா என்ற சந்தேகம் இருக்கும். பொதுவாக காபி குடித்தால் புற்றுநோய் ஏற்படலாம் என்று சில வதந்திகள் உள்ளது. அதே போல டீயை விட காபி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமானது என்று சிந்தனையும் சிலருக்கு உண்டு. இந்த நிலையில் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் உங்கள் உடலில் ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் பாதிப்புகள் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெரும்பாலானோர் ஒரு நாளைக்கு தண்ணீர் குடிப்பது போல பத்து கப் காபி கூட குடிப்பார்கள். இந்த காபியில் உள்ள காஃபின் நம் மூளையை தூண்டி அலர்டாக இருக்க பெரிதும் உதவுகிறது. இதனால் உடற்பயிற்சி திறன், மனநிலை மற்றும் மூளை செயல்பாடு மேம்பட உதவுகிறது. காபி குடிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் இருந்தாலும் தினசரி காலையில் வெறும் வயிற்றில் காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை என்று மருத்து ஆய்வுகள் கூறுகின்றது.

 coffee ()

அஜீரணக் கோளாறு ஏற்படும்:

இந்த காபியில் உள்ள கசப்பு தன்மை நம் வயிற்றில் குறிப்பிட்ட அமிலங்களை தூண்டும். இதனால் வெறும் வயிற்றில் காபி குடித்தவுடன் செரிமான பிரச்சனைகள், அஜீரண கோளாறுகள், குடல் அழற்சி, நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற நோய்கள் ஏற்படலாம். குறிப்பாக ஒரு சிலரின் உடல் காஃபி குடிக்கும் போது அதிக அளவு சென்சிட்டுவாக இருக்கும். இதனால் இது போன்ற பல அறிகுறிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையில் தினசரி காலையில் உணவு சாப்பிட்ட பிறகு காபி குடிப்பது நல்லது.

மன அழுத்தம் அதிகரிக்கும்:

மன அழுத்தத்தை குறைக்க பலரும் காபி குடிப்பார்கள். இது நம் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் ஹார்மோனை அதிக அளவு தூண்டிவிட பெரிது உதவுகிறது. பொதுவாக இந்த கார்டிசோல் ஹார்மோன் தினமும் காலையில் நீங்கள் எழுந்து கொள்ளும்போது உங்கள் உடலில் அதிகமாக இருக்கும். மேலும் இரவு நேரங்களில் தூங்க செல்லும் போது இந்த கார்டிசோல் ஹார்மோன் குறைந்துவிடும். இதனால் வெறும் வயிற்றில் காபி குடித்து வந்தால் இந்த ஹார்மோன் அளவு அதிகரித்து பல உடல் நல பிரச்சினைகள் ஏற்படும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. குறிப்பாக இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்க கூடும்.

காபியின் பக்க விளைவுகள்:

தினசரி காலையில் வெறும் வயிற்றில் அதிகமாக காபி குடிப்பதால் உங்கள் மூளையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். மேலும் தினசரி காலையில் வெறும் வயிற்றில் காபி குடித்து வந்தால் இதயத் துடிப்பு பிரச்சனைகள், மன பதட்டம், தலைவலி உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. அதே போல இந்த காபியின் தாக்கம் நம் உடலில் குறைந்தது 7 மணி நேரத்திற்கு மேல் இருப்பதால் இரவில் காபி குடிப்பது தூக்கத்தை பாதிக்கக்கூடும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP