Rosemary Tea Benefits: காலையில் ரோஸ்மேரி டீ குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள்

தினசரி காலையில் ரோஸ்மேரி டீ குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

rosemary tea ()

நம்மில் பலருக்கும் தினசரி காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால் இந்த காபியில் உள்ள கேப்பைன் அதிக அளவு சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இல்லை. இதற்கு பதிலாக தினசரி காலையில் மூலிகை தேநீர் குடித்து வரலாம். அந்த வரிசையில் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ரோஸ்மேரி தேநீர் செய்வது எப்படி என்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரோஸ்மேரி டீ செய்வது எப்படி?

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு ரோஸ்மேரி மூலிகை இலைகளை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். குறைந்தது ஐந்து நிமிடம் இது கொதித்து வந்ததும் ரோஸ்மேரி இலைகளை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றி கொள்ளுங்கள். சுவைக்கு தேவைப்பட்டால் சிறிதளவு லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து குடிக்கலாம். மேலும் இந்த ரோஸ்மேரி டீயில் ஒரு ஏலக்காய், பட்டை அல்லது இலவங்கம் சேர்த்து கொதிக்க விட்டால் சுவையும் மணமும் அதிகரிக்கும்.

ரோஸ்மேரி டீ குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

best benefits rosemary tea scale

ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள்:

இந்த ரோஸ்மேரியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நம் உடலில் சேதம் ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவும். தினசரி காலையில் நீங்கள் காபி குடிப்பதற்கு பதிலாக இந்த ரோஸ்மேரி டீயை குடித்து வரலாம்.

செரிமானம் சீராகும்:

நம் உணவு செரிமானத்துக்கு உதவக்கூடிய என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க இந்த ரோஸ்மேரி டீ பெரிதும் உதவுகிறது. தினசரி இந்த ரோஸ்மேரி டீ குடித்து வந்தால் அஜீரணம், வயிற்றில் வீக்கம், வாய்வு, மலச்சிக்கல் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

மூளை ஆரோக்கியம்:

இந்த ரோஸ்மேரி டீ குடித்து வந்தால் கூர்நோக்கும் திறன் மனதெளிவு ஆகியவற்றை அதிகரிக்க செய்து மூளையின் அறிவாற்றலை உயர்த்த பெரிதும் உதவுகிறது. மேலும் இந்த ரோஸ்மேரி டீ மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

உடல் வீக்கம் குறையும்:

இந்த ரோஸ்மேரி டீயில் உள்ள ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் நம் உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவும். இதனால் உங்களுக்கு ஆர்த்ரைட்டிஸ் மற்றும் தளர்வுற்ற தசைகள் போன்ற கோளாறு பிரச்சனைகளில் இருந்து நாளடைவில் நிவாரணம் பெற முடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி:

ரோஸ்மேரி டீயில் உள்ள வைட்டமின் சி சத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதனால் தொற்று நோய் ஏற்படாமல் உடலை பாதுகாக்க முடியும். மேலும் மன அழுத்த பிரச்சனையில் உள்ளவர்களுக்கு இந்த ரோஸ்மேரி டீ ஒரு சிறந்த மருந்து.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP