Rhododendron Benefits : மிகவும் அரிதான மலைப்பூவரசு பூக்களில் இவ்வளவு நன்மைகளா!

பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அடர்ந்த இதழ்களை கொண்டிருக்கும் இந்த சிகப்பு நிற பூக்களின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் படித்தறியலாம்…

rhododendron benefits for health

பிரபல பாலிவுட் நடிகையான பாக்யஸ்ரீ அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி உணவு முறை மற்றும் மன ஆரோக்கியம் குறித்த பல பயனுள்ள குறிப்புகளை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் மலைப்பூவரசு பூக்களின் ஆரோக்கிய நன்மைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த மலைப்பூவரசு பூக்களை ஆங்கிலத்தில் ரோடோடென்ட்ரான் என்று அழைக்கிறார்கள்.

இது நேபாளத்தின் தேசிய பூவாகும். இதில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சர்க்கரை நோயை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும், இதில் ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் C, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. இவை உங்கள் இதயம், கல்லீரல் மற்றும் சருமத்திற்கு நன்மை பயகின்றன. இந்த பூக்களை கொண்டு ஜூஸ் தயாரிக்கும் முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • மலைப்பூவரசு பூக்களின் சாறு - ⅓ கப்
  • தண்ணீர் - ⅔ கப்
rhododendron flower

செய்முறை

  • 1/3 பங்கு பூ சாறை 2/3 பங்கு தண்ணீரில் கலந்து 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  • சூடு தணிந்த பிறகு வடிகட்டி உடனடியாக குடிக்கவும்.

மலைப்பூவரசு பூக்களில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இதன் பூஞ்சை எதிர்ப்பு, ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன் இலைகளில் சக்திவாய்ந்த துவர்ப்பு பண்புகள் உள்ளன. இது தலைவலி மற்றும் வயிற்று வலியை குணப்படுத்த உதவுகிறது. மலைப்பூவரசு பூக்கள் தரும் அதிசய ஆரோக்கிய நன்மைகளை இப்போது விரிவாக பார்க்கலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

மலைப்பூவரசு பூக்கள் பல ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது கீல்வாதம் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். மேலும் இதில் உள்ள சபோனின்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்ற பைட்டோ கெமிக்கல்கள் வீக்கத்தை உடனடியாக குறைக்க உதவுகின்றன.

இந்த பூக்களில் குவெர்செடின் மற்றும் ருடின் எனும் இரண்டு அழற்சி எதிர்ப்பு இரசாயனங்கள் உள்ளன. இதில் குவெர்செடின் சிறுநீரகம், புரோஸ்டேட் மற்றும் சிறுநீர்ப்பையில் வீக்கத்தைக் குறைக்கிறது, மேலும் ரூடின் வாய் புண்கள், வயிற்றின் வீக்கம் மற்றும் கீல்வாதத்திற்கு நன்மை தரும்.

rhododendron flower benefits

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது

மலைப்பூவரசு பூக்களின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன. இது இரத்தம் உறைவு ஏற்படுவதையும் தடுக்கிறது.

நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள்

மலைப்பூவரசு பூக்களில் பயோஆக்டிவ் ஸ்டீராய்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. மேலும் இதில் உள்ள இரண்டு சக்திவாய்ந்த ஃபிளாவனாய்டுகள் வயிற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.

சருமத்திற்கு நல்லது

மலைப்பூவரசு பூக்களின் சாறை குடிப்பது இரத்த சிவப்பணுக்களை அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் சரும நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு பல அற்புத பலன்களை அள்ளித் தரும் முருங்கை இலை பொடி

பலவீனத்தை போக்கும்

மலைப்பூவரசு பூக்களில் இரும்பு சத்து, கால்சியம், துத்தநாகம், தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் இரும்பு சத்து குறைபாட்டை போக்கலாம். இதனுடன் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்தலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP