எடை குறைப்பு, சர்க்கரை நோய் தடுப்பு… அடுக்கடுக்கான நன்மைகளை வழங்கும் பாஸ்மதி அரிசி

பிரியாணி சமைப்பதற்கு நாம் பயன்படுத்தும் பாஸ்மதி அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு பல விதமான நன்மைகளை அளிக்ககூடியது.

health benefits of basmati rice

இந்தியாவில் பல அரிசி வகைகள் உற்பத்தி செய்யப்பட்டாலும் பாஸ்மதி அரிசிக்கு தனி மவுஸ் உள்ளது. சைவ மற்றும் அசைவ பிரியாணி, ஜீரா சாதம் மற்றும் புலாவ் போன்ற ரெசிபிகளுக்கு பாஸ்மதி அரிசி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசியாகவும் பாஸ்மதி அரிசி உள்ளது. ஜம்மு - காஷ்மீர், உத்தரகாண்ட், ஹரியானா, டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநிலங்களில் 34 வகையான பாஸ்மதி அரிசி உற்பத்தி செய்யப்படுகின்றன. பாஸ்மதி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

basmati rice nutritional content

ஊட்டச்சத்து நன்மைகள்

பாஸ்மதி அரிசி கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். பாஸ்மதி அரிசி உடலுக்கு நீடித்த ஆற்றலை வழங்கக்கூடியது. தடகள வீரர்களுக்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விரும்பும் நபர்களுக்கும் பாஸ்மதி அரிசி சிறந்த தேர்வாக அமைகிறது.

குறைந்த கிளைசெமிக் குறியீடு

மற்ற அரிசி வகைகளை போல் அல்லாமல் பாஸ்மதி அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு படிப்படியாகவே அதிகரிக்கும். இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் பாஸ்மதி அரிசி உதவுகிறது.

ஆரோக்கியமான இதயத்திற்கு நல்லது

பாஸ்மதி அரிசியில் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. இதய ஆரோக்கியம் மற்றும் அதன் சிறந்த செயல்பாட்டிற்கான விஷயங்கள் பாஸ்மதி அரிசியில் உள்ளன. இதனால் நமக்கு இதய நோய்களின் அபாயமும் குறைவு.

செரிமானத்திற்கு உகந்தது

செரிமான உதவும் பாஸ்மதி அரிசி நார்ச்சத்து குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தடுப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

பாஸ்மதி அரிசியில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. செல்களைப் பாதுகாப்பதிலும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாஸ்மதி அரிசியின் பிரதான நன்மைகள்

  • பாஸ்மதி அரிசியில் வைட்டமின் பி மற்றும் துத்தநாகம் போன்ற ஆரோக்கியமான சருமம் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
  • பாஸ்மதி அரிசியால் உணவு ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதில்லை.

ஒரு கப் பாஸ்மதி அரிசியில் சுமார் 210 கலோரிகள் உள்ளன. இதில் ஆறு கிராம் புரதம், 46 கிராம் கார்போஹைட்ரேட், 0.5 கிராம் கொழுப்பு மற்றும் பூஜ்ஜிய அளவு சர்க்கரை கொண்டுள்ளது. மேலும் பாஸ்மதி அரிசியில் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP