Foods For Cancer Patients: புற்றுநோயால் பாதிக்கப்ட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு சாப்பிட வேண்டிய உணவு முறை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

medium introduction to cancer   ()
medium introduction to cancer   ()

புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம். பழங்கள் காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்த வரிசையில் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு நீங்கள் சாப்பிட வேண்டிய உணவு முறை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

புரதச்சத்து:

Protein calculator

புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அதிக புரதச்சத்து தேவைப்படுகிறது. ஏனென்றால் அவர்களின் உடலில் உள்ள திசுக்கள் குணப்படுத்தவும் தொற்று நோய் எதிர்ப்பு போராடவும் புரதச்சத்து மிகவும் அவசியம். நீங்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு போதுமான அளவு புரதங்கள் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்கள் உடல் தேவையான எரிபொருளை பெறுவதற்கு தசைகளை உடைக்க செய்யும். இதனால் புற்றுநோயிலிருந்து குணமாக உங்கள் உடல் அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம். மீன் கோழி இறைச்சி முட்டை நட்ஸ் உலர் பழங்கள் மற்றும் சோயா போன்ற உணவு வகைகள் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அளிக்க உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்பு:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். நீங்கள் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் உடல் ஆற்றலை சேமிக்க உதவுகிறது. அதே போல வைட்டமின்கள் உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். ஆலிவ் எண்ணெய், வேர்க்கடலை எண்ணெய், கனோலா போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. அதே போல குங்குமப்பூ சூரியகாந்தி எண்ணெய் சோளம் ஆளி விதை போன்றவற்றில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்:

Carbohydrates share ()

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊட்டச்சத்தின் ஒரு பகுதியாக கார்போஹைட்ரேட் இருப்பது மிகவும் அவசியம். நீங்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இது உங்கள் உடல் உறுப்புகளின் செயல்பாட்டுக்கு தேவையான எரிபொருளாக செயல்படுகிறது. உதாரணமாக நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், பாஸ்தா, உருளைக்கிழங்கு போன்றவற்றில் வைட்டமின் ஏ சத்து மற்றும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க உதவுகிறது.

அதிக தண்ணீர்:

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு உடலில் நீரிழிப்பு பொதுவான பிரச்சனையாக இருக்கும். இவர்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் புற்றுநோய் சிகிச்சையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். மேலும் காபின் அளவை குறைத்து விட்டு தினசரி 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் பால் மற்றும் ஆரோக்கியமான பழச்சாறுகளை உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP