
கிராம்பு மிகவும் சக்தி வாய்ந்த நம் வீடுகளில் பயன்படுத்தும் ஒரு மசாலா பொருள். இந்த கிராம்பு ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளதால் சர்க்கரை நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த மருந்து என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த அற்புத மூலிகை கிராம்பு உள்ள ஊட்டச்சத்துக்கள் வளர்ச்சிதை மாற்ற பிரச்சனைகளை குறைத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் நம் உடலுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் அபாயம் குறையும். இந்த நிலையில் கிராம்பு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் நார்ச்சத்து, கால்சியம், மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்து இந்த கிராம்பு அதிக அளவு நிறைந்துள்ளது. இது நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க பெரிதும் உதவுகிறது.
இந்த கிராம்பு நம் உடலில் இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்க பெரிதும் உதவுகிறது. இதனால் இன்சுலின் ஹார்மோன்கள் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் உடலுக்கு ஆற்றல் கிடைக்க கிராம்பு தினசரி சாப்பிட்டு வரலாம். அதே போல பொதுவாகவே சர்க்கரை நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க கிராம்பு சாப்பிட்டு வருவது நல்லது. இது அவர்கள் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது.
கிராம்பு உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் குறைய உதவும். ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 கிராம் கிராம்பு சாப்பிட்டால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும் என்று கூறப்படுகிறது.
இன்ஃப்ளுயன்சா மற்றும் டெங்கு கொசுக்களால் பரவும் வைரஸ் தொற்று நோய்களின் அபாயத்தை குறைக்க கிராம்பு பெரிதும் உதவுகிறது. இந்த கிராம்பு சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறுகள் வாந்தி குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த கிராம்பு பெரிதும் உதவுகிறது. நம் வீடுகளில் சமைக்கும் பெரும்பாலான உணவு வகைகளில் கிராம்பு சேர்ப்பதற்கான முக்கிய காரணம் கூட இது தான்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
