காலையில் எழுந்தவுடன் நம்மில் பலரும் தங்கள் நாளை, ஒரு கப் காபி உடன் தொடங்குகிறோம். சிலர் பாலுடன் காபி குடிக்க விரும்புவார்கள், இன்னும் சிலர் பால் இல்லாமல் பிளாக் காபி குடிப்பார்கள். வேலை செய்யும்போது நாம் சோர்வாக உணர்ந்தால், ஒரு கப் பிளாக் காபி நமக்கு புத்துணர்ச்சி அளிப்பது போல் உணர்கிறோம்.
இந்த பிளாக் காபி நம் மனநிலையை நன்றாக வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், வேலையின் போது வரும் தூக்கத்தையும் விரட்ட உதவுகிறது. பெரும்பாலான மக்கள் பிளாக் காபி குடிப்பதை மிகவும் ஆரோக்கியமானதாக கருதுகின்றனர். இதை குடிப்பது உடலுக்கு நன்மையை மட்டுமே தரும், எந்த வித விளைவுகளையும் தராது என்றும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழிக்கேற்ப, எந்த ஒரு விஷயத்தையும் அதிகமாக உட்கொள்ளும்போது அது பக்க விளைவுகளை தரும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் பிளாக் காபி அதிகமாக உட்கொள்வதால் நம் உடலுக்கு பல தீமைகள் உள்ளன. ஆரோக்கியமான விஷயங்கள் சரியான அளவு உட்கொள்ளும் வரை ஆரோக்கியமாக இருக்கும். பிளாக் காபியில் காஃபின் (Caffeine) இருப்பதால் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
வயிற்றில் பிரச்சனை ஏற்படும்:
பிளாக் காபியில் காஃபின் மற்றும் அமிலம் நிறைந்துள்ளது. பிளாக் காபி அதிகமாக உட்கொள்வது உங்கள் வயிற்றில் அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளடையவில் உங்கள் வயிறு இருக்கமாக மாறுவதை நீங்கள் உணரலாம். இது வயிற்றில் கோளாறு இருப்பதைக் குறிக்கிறது. இது பிளாக் காபி அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் ஒரு விதமான பக்க விளைவு.
மன அழுத்தம்:
பிளாக் காப்பியை குறைந்த அளவில் குடிப்பதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால், அது மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகப்படியான பிளாக் காபி குடிப்பதால், உங்கள் உடலில் அதிக மன அழுத்த ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இது கவலை மற்றும் பதற்றத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்கமின்மை:
அதிகமாக பிளாக் காபி குடிப்பது உங்கள் தூக்க முறையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் இரவில் நன்றாக தூங்க விரும்பினால், தூங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு காபி சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இரவில் பிளாக் காபி குடித்தபிறகு தூங்க செல்லும் பழக்கும் சிலருக்கு உண்டு. அவ்வாறு பிளாக் காபி குடிப்பதால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்களை எடுக்க முடியாது:
அதிகமாக பிளாக் காபி குடிப்பதன் மூலம், உடலுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படும் இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களை உணவில் இருந்து எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவர் தினமும் 400 மில்லிகிராம் காஃபின் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் காபி நம் உடலுக்கு போதுமானது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாய்வு தொல்லை:
மாலை வேளையில் அல்லது மதிய உணவுக்கு முன்பாகவோ வேண்டுமானால் சிறிது பிளாக் காபி குடிக்கலாம். ஆனால் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பிளாக் காபி குடிக்கக் கூடாது. காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்கும்போது அது வாய்வுத் தொல்லை, வயிறு அசளகரியம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும். அதோடு காபியில் உள்ள அமிலத்தன்மை அசிடிட்டி, அஜீரணக் கோளாறு ஆகியவற்றையும் ஏற்படுத்தலாம்.
உடல் எடை குறையும்:
பிளாக் காபி குடித்தால் உடல் எடை வேகமாகக் குறையுமாம். எடை குறைக்க நினைப்பவர்கள் உற்பயிற்சி செய்வதற்கு முன்பு பிளாக் காபி குடிப்பது நல்லது. ஆனால் சரியான எடையில் இருப்பவர்கள் காலை நேரத்தில் பிளாக் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. இது கொழுப்பு செல்களை உடைத்து எரிக்கும் தன்மை கொண்டது. அதனால் உங்கள் எடை எளிதில் குறைந்து விடும்.
மேலும் படிக்க:இதய நோய் அபாயத்தை குறைக்கும் கிரீன் டீ!
கருச்சிதைவு ஏற்படலாம்:
ஒரு மருத்துவ ஆய்வின் படி, கணவன் மனைவி அதிகமாக பிளாக் காபி குடிப்பதனால் பெண்களிடையே கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக கருத்தரிக்கும் நேரத்தில் கர்ப்பத்தின் முதல் ஏழு வாரங்களில் இரண்டு கப் காபிக்கு மேல் குடிப்பதால், கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation