வெண்டைக்காய் மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. வழவழப்பான இந்த காய்கறியை முறையாக சமைத்தால் போதும், சுவை அள்ளும்! சாம்பார், புளிக்குழம்பு, பொரியல், வறுவல் என வெண்டைக்காயில் எது செய்தாலும் அது ஹிட் தான்.
வயது வரம்பின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் விருப்பமான இந்த சுவை மிகுந்த காய்கறியின் நிகரற்ற ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். வாரத்தில் 1-2 முறையாவது வெண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபின் அதிகரிக்க, எலும்புகள் வலு பெற முளைகட்டிய ராகி சாப்பிடுங்கள்!
வெண்டைக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான செயல்முறை மற்றும் மல இயக்கத்தை எளிதாக்க உதவுகிறது. வெண்டைக்காய் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், மலச்சிக்கலை தடுக்கவும் சிறந்தது. இதனுடன் வெண்டைக்காய் சாப்பிட்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமலும் இருக்கும்.
வெண்டைக்காயை உணவில் சேர்த்து வர புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை 63 % வரை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக இவை மார்பக புற்று நோயின் அபாயத்தை பெருமளவு குறைக்கின்றன.
வெண்டைக்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை தாமதப்படுத்துகிறது. ஒரு சில நாடுகளில், வறுத்த வெண்டைக்காயின் விதைகளை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் A கண்கள் மற்றும் அதன் நரம்புகளுக்கு அதிக நன்மைகளை தருகின்றன. வைட்டமின் A நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வர கண் சார்ந்து பல நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். இதனுடன் தெளிவான கண் பார்வையையும் பெற முடியும்.
வெண்டைக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கல்லீரலின் செல்களை பாதுகாக்கின்றன. வெண்டைக்காயை உணவில் சேர்த்து வர கல்லீரல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
உடலில் கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும்பொழுது இதய நோய்களின் அபாயமும் கணிசமாக அதிகரிக்கின்றன. நார்ச்சத்து நிறைந்த வெண்டைக்காய் கெட்ட கொலஸ்ட்ராலின் உறிஞ்சுதலை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் இருதய நோயின் அபாயத்தை குறைக்கவும் வெண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வெண்டைக்காயில் நிறைந்துள்ள ஃபோலேட் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது கர்ப்பிணிகளின் ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், இரும்புச் சத்து பற்றாக்குறை மற்றும் இரத்த சோகையை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் C தாய் மற்றும் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: அழகும் ஆரோக்கியமும் தரும் நெல்லிக்காய் தண்ணீர், தினமும் இப்படி குடித்து பாருங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com