Barley Water Benefits: கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் பார்லி தண்ணீர்!

பார்லி தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

barley water benefits

கோடை வெயில் துவங்கி விட்டாலே நம்மில் பலருக்கும் உடல் வறட்சி ஏற்படும். கொளுத்தும் வெயிலில் ஒரு மணி நேரம் வெளியில் சென்று வந்தால் உடனே நம் உடல் வறட்சியால் அவதிப்படுகிறது. இதனால் உங்கள் உடல் நீர்ச்சத்து குறைந்து அடிக்கடி சோர்வாக உணரலாம். கோடை காலத்தில் உங்கள் உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள அடிக்கடி வீட்டில் பார்லி நீர் குடித்து வரலாம். இந்த பார்லி நீர் உங்கள் உடலை வறட்சியால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது. இந்த பார்லி தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

கோடை வெயிலுக்கு பார்லி:

இந்த பார்லி தண்ணீரில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். உங்கள் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை பாதுகாக்க பார்லி ஒரு சிறந்த உணவு என்று கூறலாம். எனவே தான் கோடை காலத்தில் தினமும் பார்லி தண்ணீரை குடிக்க முயற்சிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்து பார்லி:

சர்க்கரை நோயாளிகளும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளும் தினமும் பார்லி தண்ணீர் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறப்படுகிறது. இந்த பார்லி தண்ணீர் குடித்து வருவதினால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் கட்டுப்பாடுடன் இருக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க ஒரு சிறந்த உணவு இந்த பார்லி.

தினமும் பார்லி தண்ணீர் குடித்து வந்தால் செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சுத்தமாக உதவும். அதே போல குழந்தைகளுக்கு தினமும் பார்லி தண்ணீரை குடித்து பழக்கப் படுத்துங்கள். இது அவர்களுக்கு வயிற்று சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவும்.

உடலுக்கு ஆற்றல்:

நம்மில் பலரும் அடிக்கடி காய்ச்சல், ஜலதோஷம், சோம்பல், சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்படுகிறோம். தினமும் பார்லி தண்ணீரை குடித்து வந்தால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்கும் என்ற மருத்துவர்கள் கூறுகின்றனர். நம் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறி, நீர்ச்சத்து குறைந்து போனால் உடனே பார்லி தண்ணீரை குடிக்கலாம். இல்லை என்றால் நம் உடலில் நீர்ச்சத்து குறைவதினால் கடுமையான சோர்வு ஏற்படக்கூடும்.

சிறுநீரகப் பிரச்சனைக்கு தீர்வு:

நீரிழிப்பு நோய் ஏற்படுவதால் நம் உடல் உறுப்புகள் சேதம் அடைய ஆரம்பிக்கும். இவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் போது பார்லி தண்ணீர் அல்லது மோர் குடிப்பதை வழக்கமாகி கொள்ள வேண்டும். அதேபோல சிறுநீரக பிரச்சனையால் அவதிப்படுபவர்களும் தினமும் பார்லி தண்ணீரை குடித்து வரலாம். இது நம் உடலில் உள்ள சூட்டை தணித்து உஷ்ணம் அதிகரிக்காமல் இருக்க உதவும். இது சிறுநீரக கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இந்த பார்லி தண்ணீரில் மெக்னீஷியம், நார்ச்சத்து, மாங்கனிஸ், கால்சியம் சத்து போன்ற நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது.

உடல் எடை குறையும்:

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இந்த பார்லி தண்ணீரை குடித்து வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறையாவது இந்த பார்லி தண்ணீரை குடித்தால் போதுமானது. ஆனால் இதை தினமும் குடிக்க வேண்டும். காலையில் பார்லி தண்ணீரை குடித்து வந்தால் வயிறு நிரம்பியதாக இருக்கும். இதனால் அதிகமாக மற்ற உணவுகளை உட்கொள்ள முடியாது. இந்த பார்லி தண்ணீரில் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல் சோம்பல் அடையாமல் ஆரோக்கியமாக இருக்கும்.

கர்ப்பிணிகளுக்கு உதவும்:

கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக பார்லி தண்ணீரை குடிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பார்லி தண்ணீரை குடித்து வருவதினால் அவர்களின் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும். இதனால் கர்ப்பிணி பெண்கள் எளிதில் சோர்வடைய மாட்டார்கள். எனவே கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது ஒரு முறை பார்லி தண்ணீரை குடிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP