பழங்கள் மட்டுமே சாப்பிட்டு 7 நாட்களில் உடல் எடையைக் குறைக்கலாம்; ஆளே மாறிடுவீங்க

பழங்கள் மட்டுமே சாப்பிட்டு எடையை குறைக்க முடியுமா ? உடலில் நச்சுகளை வெளியேற்றுவது சாத்தியமா ? உடல் ஆற்றல் மேம்படுமா ? இந்த கேள்விகள் சற்று விநோதமாக இருக்கலாம். ஆம் இவை அனைத்தும் பழங்கள் சாப்பிடுவதால் சாத்தியமே.
image
image

உணவுமுறையில் சில காய்கறிகளை சாப்பிடுவதை கூட தவிர்த்துவிடுவோம். எந்த பழத்தையும் தவிர்க்க மாட்டோம். இயற்கையான இனிப்பு கொண்ட ஒவ்வொரு பழமும் உடலுக்கு வெவ்வேறு நன்மைகளை தரக்கூடியது. உடல் எடையைக் குறைப்பதற்கு பழங்கள் சாப்பிட்டால் போதுமா ? பழங்களை மட்டும் உட்கொள்ளும் உணவுமுறை பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு உணவுகளை தவிர்க்கிறது. ஏழு நாட்களுக்கு பழங்களை மட்டும் சாப்பிட்டால் உடலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். பழங்களை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். சரியான முறையில் பழங்களை உட்கொண்டால் எடை குறைப்பு சாத்தியம். எனினும் புரதச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

7 day fruit diet

எடை குறைப்பு 7 நாட்களுக்கு பழங்கள்

பழங்கள் குறைந்த கலோரிகள் கொண்டவை மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்தவை. இவை உங்களை முழுமையாக உணர வைத்து பசியை குறைக்கும். உடலில் உள்ள நச்சுகளை, கழிவுகளை வெளியேற்ற பழங்கள் உதவும். ஒவ்வொரு பழமும் ஆன்டிஆக்ஸிடண்ட் கொண்டது. சரும பளபளப்புக்கு தேவையான கொலாஜன் வைட்டமின் சி பழங்களை உட்கொள்வதால் கிடைக்கிறது.

முதல் நாள் : நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்

தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட்டு இந்த உணவுமுறையை தொடங்கவும். இவற்றில் 90 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளது.

காலை : 1 கிலோ அளவிற்கு தர்பூசணி பழம்
மதியம் : ஆரஞ்சு மற்றும் பப்பாளி சாலட்
ஸ்நாக் : கை நிறைய ப்ளூபெர்ரி
இரவு : ஒரு அன்னாசி பழம்

இரண்டாம் நாள் : நார்ச்சத்து நிறைந்த பழங்கள்

காலை : பச்சை ஆப்பிள் மற்றும் சியா விதைகள்
மதியம் : பேரிக்காய் மற்றும் வாழைப்பழ ஸ்மூத்தி
ஸ்நாக் : பேரீச்சைபழம் ( 4-5 )
ஈரவு : இரண்டு கொய்யா பழம்

மூன்றாம் நாள் : வைட்டமின் சி நிறைந்த பழங்கள்

சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். அதே போல சரும நலனுக்கும் பயன் தரும்.

காலை : திராட்சை மற்றும் எலுமிச்சை ஜூஸ்
மதியம் : அன்னாசி பழம், ஆரஞ்சு சாலட்
ஸ்நாக் : ஒரு மாதுளைப்பழம்
இரவு : மாம்பழம், பப்பாளி

நான்காவது நாள் : நட்ஸ் வகைகள்

புரதச்சத்து குறைபாட்டை தவிர்க்க சியா விதை மற்றும் பாதாம் சாப்பிடவும்

காலை : வாழைப்பழம், பாதாம்
மதியம் : பெர்ரி பழம், சியா விதை மற்றும் இளநீர்
ஸ்நாக் : நட்ஸ் வகைகள்
இரவு : பழ சாலட்

ஐந்தாவது நாள் : செரிமானத்திற்கு உதவும் பழங்கள்

காலை : அரை பப்பாளி பழம், கை நிறைய வால்நட்
மதியம் : அத்திப்பழம் மற்றும் அன்னாசி பழ ஸ்மூத்தி
ஸ்நாக் : பேரீச்சைபழம் ( 4-5 )
இரவு : இரண்டு ஆரஞ்சு பழம்

ஆறாவது நாள் : பழங்கள், காய்கறிகள்

காலை : கீரை, ஆப்பிள் மற்றும் இஞ்சி சாறு
மதியம் : மாம்பழ சாலட்
ஸ்நாக் : பாதாம்
இரவு : இரண்டு மாதுளைப்பழம்

ஏழாவது நாள் : தாவர உணவு

தசை வலிமை இழக்காமல் இருக்க புரதச்சத்து நிறைந்த தாவர உணவுகளை சாப்பிட வேண்டும்

காலை : சியா, பெர்ரி பழங்கள்
மதியம் : ஆப்பிள் சாலட்
ஸ்நாக் : சூரியகாந்தி விதை
இரவு : பாதாம் - வாழைப்பழ ஸ்மூத்தி

7 நாட்களுக்கு தவறாமல் இந்த உணவுமுறையை பின்பற்றினால் நிச்சயம் உடல் எடை குறையும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP