சுற்றுலா செல்லலாமா? என்ற வார்த்தையைக் கேட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்தில் துள்ளிக்குதிப்போம். அந்தளவிற்கு நமது மனதிலுள்ள சந்தோஷத்தை வெளிப்படுத்த உதவும் அற்புத தருணம். இந்தியாவைப் பொறுத்தவரை நாம் சுற்றிப்பார்ப்பதற்கான ஏராளாமான இடங்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் கொட்டிக்கிடக்கிறது. குறிப்பாக உலகையே திரும்பிப் பார்க்கும் வகையிலான தொல்லியல் சின்னங்கள், பாரம்பரியமிக்க இடங்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லை.நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு உதவக்கூடிய சுற்றுலா விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.
நிலையான பயணங்கள், காலத்திற்கு அழியாத நினைவுகள் (Sustainable Journeys, Timeless Memories) என்பதை மையமாகக் கொண்டு இந்தாண்டு சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. ஆம் காலத்திற்கும் அழியாத நினைவுகளுக்கு சுமந்து செல்வதற்கு உதவக்கூடிய சுற்றுலா எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்த விபரங்களை இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
குடும்பத்தின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாம் ஒவ்வொரு நாளும் அயராது உழைத்து வருகிறோம். சில நேரங்களில் விடுமுறை கூட எடுப்பதில்லை. இப்படி உழைப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ? அந்தளவிற்கு ஓய்வும், மனதிற்கு நிம்மதியும் கொடுக்க வேண்டும். இதற்கு ஒரே தீர்வு டூர் அதாவது சுற்றுலா தான். சுற்றுலா என்றாலே ஜம்மு காஷ்மீர், சிம்லா, உத்ரகாண்ட்., டெல்லி, ஊட்டி, கொடைக்கானல் என்றில்லை. நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் என்னென்ன இடங்கள் இருக்கிறதோ? அந்த இடங்களுக்கு ஓர் விசிட் செய்யலாம். நமக்கு தெரியாமலேயே நம்முடைய பகுதிகளில் பல சுற்றுலா இடங்கள் ஒளிந்துள்ளது. மத சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இன்ப சுற்றுலா, தொல்லியல் சுற்றுலா, கலாச்சார சுற்றுலா என உங்களுக்கு எதில் அதிக ஆர்வம் உள்ளதா? அதைத் தேர்வு செய்து பயணிக்கவும். இந்த பயணம் ஒரு நாள் முழுவதும் உங்களை மகிழ்ச்சியாகவும், வேலையை நினைத்து வருந்தாமல் ஒய்வெடுப்பதற்கும் உதவியாக உள்ளது.
இவ்வாறு உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குப் பயணிக்கும் போது, உள்ளூர் பொருளாதார மேம்படும். அங்குள்ள மக்களும் கடைகள் அமைத்து தங்களின் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். வணிகங்கள் மற்றும் வரி வருவாயை உயர்த்துகிறது. சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி குழந்தைகளுடன் கலாச்சார தளங்களுக்குச் செல்லும் போது உள்ளூர் இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் குறித்து அறிந்துக் கொள்ள முடியும். வாரத்தின் இறுதி நாள் அல்லது விடுமுறை நாட்களில் நீங்கும் பயணிக்கும் போது, மனதிற்கு ரில்லாஸாக இருக்கும். மேலும் சுற்றுலாத் துறையின் வெற்றி மற்றும் வளர்ச்சிக்குப் பார்வையாளர்களின் வருகைத் தான் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com