herzindagi
lakshadweep tourism

Lakshadweep Trip : லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி பெறுவதற்கான வழிகள்

லட்சத்தீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி சான்று, கட்டணம், பயண விவரம் உள்ளிட்ட தகவல்களை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
Editorial
Updated:- 2024-02-26, 07:11 IST

திரும்பும் திசைகள் எல்லாம் தண்ணீராகத் தெரியும் இடத்திற்கு சுற்றுலா செல்ல ஆசையா ? இதற்கு லட்சத்தீவு மிகச் சிறந்த தேர்வாகும். முந்தைய காலங்களில் மாலத்தீவு சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் பிரதமர் மோடி லட்சத்தீவு சென்று அதன் இயற்கை அழகை விவரித்து புகைப்படங்கள் வெளியிட்ட பிறகு தங்களது கவனத்தை முற்றிலும் லட்சத்தீவுக்கு மாற்றியுள்ளனர். நீங்கள் அங்கு பயணம் செய்ய விரும்பினால் கீழ் வரும் விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி (PAP): லட்சத் தீவு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். எனவே நீங்கள் அங்கு செல்ல வேண்டுமானால் உரிய அனுமதி பெற வேண்டும்.

lakshadweep trip cost

விண்ணப்ப செயல்முறை

  • லட்சத்தீவு நிர்வாகத்தின் (http://lakshadweeptourism.com/contact.html) இ-பெர்மிட் போர்டல் மூலம் ஆன்லைனில் அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • அதில் உங்கள் பெயர், முகவரி, வருகையின் நோக்கம், பயணத் தேதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவுகள் போன்ற அடிப்படைத் தகவல்கள் தெரிவிக்க வேண்டும்.
  • அடையாளச் சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை நீங்கள் பதிவேற்றலாம்.
  • இவற்றை சமர்ப்பித்ததும் விண்ணப்பம் ஏழு வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படும்.

கட்டணம்

  • உங்களுக்குக் கிடைத்த அனுமதி 30 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
  • அனைத்து வயதினருக்கும் அனுமதி கட்டணம் தலா 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

மேலும் படிங்க திருமணம் செய்வதற்கு இந்தியாவில் உள்ள அழகான தீவுகள்

விவரம் 

  • விண்ணப்பத்தின் போது நீங்கள் பார்வையிட விரும்பும் தீவுகளைத் தேர்வு செய்யலாம்.
  • பயணத்தின் போது அனுமதி சான்று மற்றும் உங்களின் அடையாளச் சான்று ஆகியவற்றின் நகலை எடுத்துச் செல்லுங்கள்.
  • லட்சத்தீவில் உள்ள சில தீவுகளுக்கு ஸ்கூபா டைவிங் அல்லது வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பதற்கு சிறப்பு அனுமதி தேவைப்படலாம்.
  • lakshadweep permit apply online

போக்குவரத்து

  • விமானம் : சென்னையில் இருந்து கொச்சிக்கு விமானத்தில் செல்ல மூன்றாயிரம் ரூபாய் கட்டணமாகும்.
  • தீவுகளுக்கு இடையே பயணிப்பதற்கு ஒரு நபருக்கு 4,000 - 8,000 ரூபாய் வரை செலவாகும்.

விளையாட்டு

  • ஸ்கூபா டைவிங்கிற்கு 3 ஆயிரத்து 500 ரூபாயும், மீன்பிடித்து விளையாடுவதற்கு ஆயிரம் ரூபாயும், துடுப்பு படகு இயக்குவதற்கு ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

உள்ளூர் சுற்றுலா

  • அங்குள்ள கிராமங்களுக்குச் சென்றால் பாரம்பரிய படகு கட்டுவதைக் காணலாம். நடன நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம். விரும்பினால் ஆயுர்வேத மசாஜ் எடுத்துக் கொள்ளலாம்.

வரிகள்

  • இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு கட்டாயமாக 300 ரூபாய் செலுத்தி அனுமதி பெற வேண்டும்.
  • அகத்தி விமான நிலையத்திற்கு வந்தவுடன் ஒரு நபருக்கு 300 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.

சுற்றுலாவுக்கு சிறந்த நேரம்

  • அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் இங்கு சுற்றுலாவுக்கு செல்லலாம். இந்த நேரத்தில் வானிலை மிகவும் இனிமையானதாக இருக்கும்.

கூடுதல் குறிப்புகள்

  • சில தீவுகளில் ஏடிஎம்கள் மற்றும் கிரெடிட் கார்டு வசதிகள் குறைவாக இருப்பதால், போதுமான பணத்தை எடுத்துச் செல்லுங்கள். மலையாளம் தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.
  • பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து விடுங்கள். முடிந்தால் கடற்கரையைச் சுத்தம் செய்யும் முயற்சிகளில் பங்கேற்கவும்.
Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com