Places to Visit in Kodaikanal : 3 நாட்கள் கொடைக்கானலில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்

3 நாட்கள் கொடைக்கானலில் சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம். கொடைக்கானல் சுற்றுலா செல்பவர்கள் இந்த இடங்களை மிஸ் செய்து விடாதீர்கள். 

kodaikanal visit

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொடைக்கானல் மிகச் சிறந்த சுற்றுலா தலமாகும். மலைகளின் அரசி என அழைக்கப்படும் கொடைக்கானல் மலை பிரதேசத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன.

தலையார் நீர்வீழ்ச்சி

இயற்கையின் அதிசயத்தில் கொடைக்கானலில் இருக்கும் தலையார் நீர்வீழ்ச்சியும் ஒன்று. 900 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி கொட்டு அழகை பார்க்கும் போதே உடல் சிலிர்க்கும். இங்கு செல்வது சிறந்த அனுபவத்தை தரும். மிகச்சிறந்த வரலாற்று தொன்மை வாய்ந்த இடமாக உள்ளது குக்கல் குகை. கொடைக்கானலில் இருக்கும் இந்த குகை குறித்து பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. தொல் பொருள் தலமாகவும் இது விளங்குகிறது.

தேவதாரு வனம்

அடர்ந்த காடுகளுக்கு நடுவில் இயற்கையை ரசித்தப்படி அமைதியாக நடக்க விரும்புவர்கள் இங்கு கட்டாயம் செல்லலாம். காலை நேரத்தில் இந்த காடு முழுவதும் சூரிய ஒளி பரவும் அழகு கண்களுக்கு விருந்தளிக்கும்.

kodaikanal falls

சீசன் டைம்

எப்போதுமே கொடைக்கானலுக்கு சீசன் டைமில் செல்வதே சிறந்த அனுபவத்தை தரும். அந்த வகையில் கொடைக்கானலில் சீசன் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஏப்ரல் - ஜூன், ஜூனை - ஜூலை, செப்டம்பர் வரை சீசன் களைக்கட்டும்.

கொடைக்கானலில் டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான குளிர் வீசும். இந்த மாதத்தில் இரவு 6 மணிக்கு மேல் ரோட்டில் வாகனங்கள் செல்லவும் மிகவும் சிரமாக இருக்கும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP