
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள நவக்கிரக கோயில்களுக்கு ஆன்மிக பக்தர்கள் சென்று வரும் வகையில் போக்குவரத்து சேவையை தமிழக அரசு போக்குவரத்து கழகம் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. நவக்கிரக கோயில்களுக்கான பேருந்து சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்திருக்கிறது.
இந்த சேவை அறிவிக்கப்பட்டவுடனேயே ஏராளமானோர் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுள்ளனர். தமிழகத்தில் சூரியனார் கோயிலில் தொடங்கி கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் என ஒன்பது நவக்கிரக கோயில்கள் உள்ளன.
கும்பகோணத்தில் இருந்து தொடங்கும் இந்த பேருந்து சேவை ஒரே நாளில் ஒன்பது நவக்கிரங்களுக்கும் செல்கிறது. ஒரு நபருக்கு கட்டணமாக 750 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவைக்காக சொகுசு பேருந்து பயன்படுத்தப்படுகிறது. இதில் மொத்த பயண தூரம் 296 கிலோ மீட்டர் ஆகும். பயண நேரம் மட்டும் ஆறரை மணி நேரமாகும்.
மேலும் படிங்க சோழ தலைநகரான தஞ்சாவூரில் சுற்றுலாவுக்கு சிறந்த இடங்கள்
ஒவ்வொரு கோயில்களிலும் அரைமணி நேரம் முதல் இரண்டு மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதில் காலை உணவு மற்றும் மதிய உணவு அடங்கும். வார இறுதி நாட்களில் காலை 6 மணி அளவில் இந்த பேருந்து சேவை கும்பகோணத்தில் இருந்து தொடங்கும். அனைத்து கோவில்களுக்கும் சென்ற பிறகு இரவு 7.30 அளவில் மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தடையும்.
மேலும் படிங்க நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
இந்த சேவைக்கு கிடைத்துள்ள தொடர் வரவேற்பு காரணமாக பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருப்புரங்குன்றம், பழமுதிர்சோலை மற்றும் திருத்தணி ஆகிய முருகனின் அறுவடை வீடுகளுக்கு போக்குவரத்து சேவை விரைவில் தொடங்கப்படலாம். நவக்கிரக கோயில்களுக்கு ஒரே நாளில் சென்று வருவது போல் இல்லாமல் அறுபடை வீடுகளுக்கான பேருந்து சேவை வெவ்வேறு பகுதிகளில் இருந்து மூன்று நாட்கள் வரை இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
நவக்கிரக கோயில்களுக்கு செல்ல தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் படிங்க நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்கள்
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com