herzindagi
thanjavur tourism

Thanjavur Tourism : சோழர் தலைநகரான தஞ்சாவூரில் சுற்றுலாவுக்கு சிறந்த இடங்கள்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் சுற்றிப் பார்ப்பதற்கு கோயில்கள் உட்பட எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
Editorial
Updated:- 2024-02-28, 18:50 IST

தஞ்சை என சுருக்கமாக அழைக்கப்படும் தஞ்சாவூர் சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட ஒரு தொன்மையான நகரமாகும்.  உலக பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரிய கோயில் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உலகப் புகழ் பெற்றது.

tourist places in thanjavur

தஞ்சை பெரிய கோயில் 

உலகப் புகழ்பெற்ற இந்த கோயில் முதலாம் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. தென்கரையில் உள்ள தஞ்சை பெரிய கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். கற்களே கிடைக்காத காவிரி சமவெளி பகுதியில் 15 தலங்கள் கொண்ட கற்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லால் அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலை இந்தியாவிலேயே பெரிய நந்தியாகும். தமிழர் கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்றாக தஞ்சை பெரிய கோயில் விளங்குகிறது.

சிவகங்கை பூங்கா

சிவகங்கை பூங்கா தஞ்சை பெரிய கோயிலின் அருகே அமைந்துள்ள பொதுழுபோக்கு பூங்காவாகும். இங்கு சிறுவர்களை கவரும் வகையில் பொம்மை ரயில், நீச்சல் குளம், மோட்டார் படகு ஆகிய விளையாட்டு அம்சங்கள் உள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை 

நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் சரவ்ஸதி மஹால் நூலகம், கலைக்கூடம், சங்கீத மஹால், தமிழ் பல்கலைக்கழக அருங்காட்சியகம், தர்பார் மண்டபம் ஆகியவற்றை பார்க்கலாம். ஆசியாவின் பழமையான சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ் ஓலைச்சுவடிகளும், தெலுங்கு, மராத்தி மொழிகளின் காகித குறிப்புகளும், சங்ககால மருத்துவ குறிப்புகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அருங்காட்சியகத்தில் சில தெய்வகளின் செப்பு திருமேனிகளையும் பார்க்கலாம்.

saraswathi mahal library

ராஜராஜன் மணிமண்டபம்

ராஜராஜனின் நினைவாக நகரின் தெற்கு பகுதியில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது. 1991 ஆம் ஆண்டு 8வது உலகத் தமிழ் மாநாட்டின் போது சோழர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களின் பாணியில் அமைக்கப்பட்டது.

மேலும் படிங்க நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத் தலங்கள்

தஞ்சபுரீஸ்வரர் கோயில்

தஞ்சாவூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூர தொலைவில் கும்பகோணம் செல்லும் வழியில் இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் பண கஷ்டம் நீங்கும் என நம்பப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவகம்

இந்த நினைவகம் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக நினைவம் கட்டப்பட்டது. தஞ்சையில் இருந்து நான்கரை கிலோ மீட்டர் தூரத்தில் இந்த நினைவகம் உள்ளது.

ஐயாறப்பர் கோயில்

இது தஞ்சையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் திருவையாறு காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். 

புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில்

நகரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில்இந்த கோயில் அமைந்துள்ளது. இதன் அருகே கோதண்டராமர், கைலாசநாதர் கோயில்களும் உள்ளன. 

தென்பெரம்பூர் அணை 

தஞ்சை நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அணை உள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் பாயும் தென்பெரம்பூர் அணைப்பகுதியில் காணக்கிடைக்காத காட்சிகளை நீங்கள் ரசிக்கலாம்.

மேலும் படிங்க மதுரை மாநகரின் முக்கியமான 6 சுற்றுலா தலங்கள்

வடுவூர் பறவையகம்

தஞ்சாவூரில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் தஞ்சாவூர் மன்னார்குடி நெடுஞ்சாலையில் வடுவூர் பறவையகம் அமைந்துள்ளது. 38 வெவ்வேறு பறவை இனங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த பறவையகத்திற்கு வருகின்றன.

மனோரா கோட்டை

மனோரா என்ற நினைவுச்சின்னம் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜியால் கட்டப்பட்டதாகும். ஆங்கிலேயர்கள் நெப்போலினுக்கு இடையே போரிட்டு வெற்றி பெற்றதை நினைவுப்படுத்தும் விதமாக இந்த சின்னம் எழுப்பப்பட்டது. 1814ல் இந்த போர் நடைபெற்றது. இந்த அருகிலேயே பொழுதுபோக்குவதற்கு கடற்கரையும் உள்ளது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com