இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடுவதற்காகத் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிப்பது ஒரு பாரம்பரிய பழக்கமாகும். எல்லா பண்டிகைக்கும், கொண்டாட்டங்களுக்கும் நாம் வீட்டை அலங்கரிப்போம், ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டை அலங்கரிப்பது ஒரு மரபாகும். பல்வேறு நாடுகளிலும் இதை பின்பற்றி வருகிறார்கள்.
குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வித்யாசமாகவும், நேர்த்தியாகவும் வீட்டை அலங்கரிக்கும் நிகழ்வு மிக சுவாரசியமாக இருக்கும். கிறிஸ்துமஸ் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே கடைகளில் அலங்கார பொருட்களை வாங்கி, வீட்டில் இருக்கும் பொருட்களையும் வைத்துக் கண்களைக் கவரும் வண்ண விளக்குகளையும் பயன்படுத்தி வீட்டை அலங்கரிப்பார்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வீட்டிற்கு வரும் விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கவரும் வகையில் வீட்டை அலங்காரம் செய்வார்கள். இந்த பதிவில் பாரம்பரிய கிறிஸ்துமஸ் அலங்காரங்கள்பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் மரம் இல்லாமல் கிறிஸ்துமஸ் அலங்காரம் நிறைவடையாது. இந்த கிறிஸ்துமஸ் மரம் கடைகளில் எளிதாகக் கிடைக்கிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உண்மையான மரம் அல்லது செயற்கையான கிறிஸ்துமஸ் மரத்தை வாங்கிக்கொள்ளலாம். பெரிய அளவில் உயரமான கிறிஸ்துமஸ் மரம் மட்டுமல்லாமல் சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் மரங்களும் இப்போதெல்லாம் விற்கப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளைக் கிறிஸ்துமஸ் தினத்தன்று கியூட்டாக அலங்கரிக்க ஆடை யோசனைகள்!
இந்த கிறிஸ்துமஸ் மரத்தில் வண்ண விளக்குகள், மிட்டாய்கள், பொம்மைகள், பரிசுகள், மணிகள், அலங்கார பொருட்களை எல்லாம் பயன்படுத்தி அலங்கரிப்பார்கள். இந்த கிறிஸ்துமஸ் மரத்திற்கு மேல் குட்டியான நட்சத்திர வடிவிலான அலங்காரப் பொருள் வைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இந்த கிறிஸ்துமஸ் மரம் வீட்டின் ஹால் அல்லது பொதுவான அறையில் வைக்கப்படுகிறது.
கிறிஸ்துமஸ் நட்சத்திரம்
கிறிஸ்துமஸ் பண்டிகை அலங்காரத்தில் இதை தவிர்க்வே முடியாது. தேவாலயங்கள் மட்டுமின்றி கடைகள் மற்றும் வீடுகளின் வாசலிலும் நட்சத்திரம் தொங்கவிடப்படுவது வழக்கமாகிவிட்டது. இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீட்டு வாசல்களில் நட்சத்திரங்கள் தொங்க விடப்படுகின்றன. அதில் மின் விளக்கு இணைக்கப்பட்டிருக்கும். இந்த நட்சத்திரம் வீட்டின் வெளிப்புற தோற்றத்திற்கு அழகு சேர்க்கும்.
கிறிஸ்துமஸ் குடில்
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பலரது வீட்டில் இந்த கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுகிறது. அடுத்த தலைமுறைக்குக் இயேசு கிறிஸ்து எப்படி பிறந்தார் என்பதை காண்பிப்பதற்காக வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படுகிறது. மேலும் பிறக்க இருக்கும் பாலன் இயேசு நமது வீட்டிலும் பிறக்க வேண்டும் என்ற எதிர்நோக்குடனும் வீட்டில் குடில் வைக்கப்படுகிறது. இந்த கிறிஸ்துமஸ் குடிலை நமக்கு பிடித்த வகையில் கலைநயத்தோடு செய்துகொள்ளலாம். சிறியதாக மாட்டுத் தொழுவம் போன்ற அமைப்பைச் செய்து அதில் பொம்மைகள், வண்ண விளக்குகள் போன்றவற்றை வைக்கவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation