நீளமான தலைமுடிக்கு செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை இலை போதும்; பயன்படுத்தும் முறை உங்களுக்காக

கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் பேக் அல்லது எண்ணெய் தலைமுடி உதிர்வை நிறுத்துவதோடு முடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.  
image

இன்றைய காலகட்டத்தில் மக்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது மன அழுத்தம். தலைமுடிக்கு சரியாக எண்ணெய் தேய்த்துப் பராமரிக்காவிடில் ஏற்படக்கூடிய முடி உதிர்வு பிரச்சனை ஒருபுறம் இருந்தாலும் அதிக மன அழுத்தமும் முடியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. பொதுவாக அதிக மன அழுத்தத்தால் முடி உதிர்தல் மற்றும் இளம் வயதிலேயே நரைமுடி பாதிப்பை சந்திக்க நேரிடுகிறது.

தலைமுடி தான் பெண்களுக்கு அதீத அழகைக் கொடுக்கும். இளம் வயதிலேயே நரைமுடியையும், முடி கொட்டுதலும் ஏற்படும் போது வெளியில் செல்வதற்குக் கூட பல நேரங்களில் தயக்கம் காட்டுவார்கள். இதைத் தவிர்க்க கடைகளில் விற்பனையாகும் கெமிக்கல் நிறைந்த ஹேர் டை போன்றவைப் பயன்படுத்தினாலும் உடனடியாக சரிய செய்ய முடியாது.இதன் கூடவே பல உடல் நல பாதிப்புகளையும் சந்திக்க நேரிடும். ஆரோக்கியமான முறையில் தலைமுடி வளர்ச்சியைப் பெற வேண்டும் என்று நினைத்தால், செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை இலைகளைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். எப்படி? என்பது குறித்த முழு விபரம் இங்கே.

hair pack

நீளமான தலைமுடிக்கு செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை:

இடுப்புக்கீழ் அல்லது நீளமான தலைமுடியை விரும்பும் பல பெண்களின் முதன்மைத் தேர்வாக இருப்பது கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி. முடி வளர்ச்சியை கறிவேப்பிலை ஊக்குவிக்கிறது. அதே சமயம் முடிக்கு பளபளப்புத் தன்மையை செம்பருத்தி இலைகள் கொடுக்கிறது. இதுவரை பயன்படுத்தியது இல்லையென்றால் கீழ்வரக்கூடிய முறைகளில் பயன்படுத்தி உங்களது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க:கூந்தல் வறண்டு போய் பல பக்கவிளைவுகளுக்கு ஆளாகியிருந்தால் இந்த மேஜிக் எண்ணெய் உதவும்

பயன்படுத்தும் முறை:

கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலைகளை சரிபாதி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் உச்சந்தலையில் இருந்து நுனி வரை ஹேர் பேக் போன்று பயன்படுத்தவும். தொடர்ச்சியாக வாரத்திற்கு இருமுறைப் பயன்படுத்தும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியை வலுவாக்குகிறது.

ஸ்டெப் 2:

கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலைகளை நிழலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். இதையடுத்து கடாயில் அல்லது ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். லேசாக சூடானதும் காய வைத்து எடுத்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலைகளை சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். சூடு ஆறிய பின்னதாக ஒரு டப்பாவில் ஊற்றி வழக்கமாகப் பயன்படுத்தும் எண்ணெய் போன்று பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க:தங்கம் போல ஜொலிக்கும் மென்மையான சருமம் வேண்டுமா? விளக்கெண்ணெயை இப்படி யூஸ் பண்ணி பாருங்க


hair oil

ஸ்டெப் 3:

கறிவேப்பிலை மற்றும் செம்பருத்தி இலைகளை ஒன்றாக சேர்த்துத் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. கறிவேப்பிலையை மட்டும் தனியாக அரைத்து தலையில் அப்ளை செய்யலாம். இதே போன்று செம்பருத்தி இலைகளை அரைத்து வாரத்திற்கு ஒருமுறையாவது தேய்த்துக் குளித்து வரலாம். இவ்வாறு செய்யும் போது முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடி பளபளப்புடன் இருக்கவும் உதவியாக இருக்கும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP