பெண்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு முக்கியமான மேக் அப் பொருள் லிப்ஸ்டிக். பலருக்கும் இந்த லிப்ஸ்டிக் இல்லாமல் மேக் அப் முழுமையடையாது என்றே சொல்லலாம். ஒரு சில பெண்கள் லிப்ஸ்டிக் இல்லாமல் வெளியில் செல்ல மாட்டார்கள், குறிப்பாக ஒரு போட்டோ எடுக்கும்போது கூட லிப்ஸ்டிக் போட மறக்க மாட்டார்கள். ஏன் என்றால் நம் முகத்தில் உதடுகளை அழகாக வசீகரமாக எடுத்துக்காட்ட லிப்ஸ்டிக் உதவி செய்யும். ஆனால் ஒரு சிலருக்கு கடைகளில் வாங்கி பயன்படுத்தும் லிப்ஸ்டிக் காரணமாக உதடு கருமையாக மாறிவிடும். இந்த நிலையில் வீட்டிலேயே எளிய முறையில் இயற்கை பொருட்களை வைத்து லிப்ஸ்டிக் தயாரிக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்களுக்கு பிடித்த கலர் லிப்ஸ்டிக்கை இனி நீங்களே வீட்டில் செய்யலாம். குறிப்பாக இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு கூட இதை பயன்படுத்தலாம். அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்து வெறும் 10 நிமிடத்தில் எளிய முறையில் லிப்ஸ்டிக் செய்வது எப்படி என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முதலில் ஒரு பீட்ரூட் எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இப்போது அதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து மையாக அரைத்து எடுக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளலாம். இதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து, அதில் இந்த பீட்ரூட் சாற்றை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். இதை 10 அல்லது 15 நிமிடம் கொதிக்க விட்டால் திக்காக சுண்டி வரும். ஒரு கிளாஸ் அளவு பீட்ரூட் சாறு ஊற்றி கொதிக்க வைத்தால் அது 2 ஸ்பூன் அளவுக்கு சுண்டி வரவேண்டும். இப்போது அடுப்பை அணைத்து விடலாம்.
உங்களுக்கு தேவையான சிறிய டப்பா அல்லது கண்ணாடி பாட்டில் எடுத்து அதில் இந்த பீட்ரூட் சாற்றை ஊற்ற வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதற்கு பிறகு 1 ஸ்பூன் அளவு கோகோ பட்டர் சேர்த்து கலக்க வேண்டும். கோகோ பட்டர் உங்கள் உதடுகளுக்கு ஈரப்பதத்தை தருகிறது. இதனால் உங்கள் உதடு வறண்டு போகாமல் இருக்க உதவும். மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து இதை சுமார் 1 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் பிறகு எடுத்து பார்த்தால் இது திக்காக மாறிவிடும். அவ்வளவு தான் இயற்கையான பீட்ரூட் லிப்ஸ்டிக் ரெடி. இது உங்களுக்கு டார்க் பிங்க் நிறம் கொடுக்கும்.
மேலும் படிக்க: 3 நாட்களில் கழுத்தில் கருமை நீங்க டூத் பேஸ்ட் போதும்; இப்படி யூஸ் பண்ணுங்க
ஒருவேளை உங்களுக்கு லைட் பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக் வேண்டும் என்றால் அதே செய்முறையில் பீட்ரூட் பதிலாக ரோஜா இதல்களை பயன்படுத்த வேண்டும். ஆரஞ்சு கலர் லிப்ஸ்டிக் வேண்டும் என்றால் கேரட், பிரவுன் நிறம் வேண்டும் என்றால் கோகோ பவுடர் பயன்படுத்த வேண்டும். இது போல நம் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்து லிப்ஸ்டிக் தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். உங்கள் உதடுகள் எப்போதும் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com