நீண்ட நேரம் வாசனை திரவியம் உடலில் நீடித்திருக்க இந்த சிறந்த வழிகளை பாலோ பண்ணுங்க!

பிராண்ட் வாசனை திரவியமாக இருந்தாலும் கோடையில் சில மணிநேரங்களில் மறைந்துவிடுகிறது. அதை நீண்ட நேரம் தக்கவைக்கும் உதவிக்குறிப்புகளை பார்க்கலாம்

perfum big image

கோடையில் ஏற்படும் புற ஊதாக் கதிர்களில் சருமத்தைப் பாதுகாக்கும் சன்ஸ்கிரீன் அல்லது சிறந்த தரமான வாசனை திரவிய பிராண்டானது நீண்ட காலம் நீடிக்கச் செய்ய முடியாது.கோடையில் வாசனை திரவியம் நீண்ட காலம் நீடிக்கும் சில குறிப்புகள் மற்றும் தந்திரங்களை பார்க்கலாம்.

கோடையில் வாசனை திரவியம் நீண்ட காலம் நீடிக்க டிப்ஸ்

perfume  inside

வாசனை திரவியம் உடலில் நீண்ட நேரம் நீடிக்க செய்ய முதலில் சருமத்தை ஈரப்பதமாக்குவது. வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு சருமத்தில் ஜெல் அடிப்படையிலான லைட்வெயிட் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். நீரேற்றப்பட்ட தோலில் பூசும்போது வாசனை திரவியத்தின் நீண்ட ஆயுள் அதிகரிக்கிறது.

பல்ஸ் புள்ளிகளில் பயன்படுத்த வேண்டும்

வாசனை திரவியம் பூசும்போது மனதில் கொள்ள வேண்டியவை நம் உடலில் சில துடிப்பு புள்ளிகள் உள்ளது. இந்த பகுதிகள் கழுத்து, காதுகளுக்கு பின்னால், மணிக்கட்டு மற்றும் உள் முழங்கைகள். இருப்பினும் வாசனை திரவியத்தை வேகமாக அடித்து மணிக்கட்டுகளில் தேய்ப்பதைத் தவிர்க்கவும். வாசனை திரவியத்தை லேசாக தெளிக்க வேண்டும். வாசனை திரவியத்தை உடல் பகுதிகளில் கிட்ட வைத்து தெளிப்பதை விட சிறிதி தூரமாக வைத்தி தெளித்தால் அனைத்து பகுதிகளிலும் சென்றடையும். இது நாள் முழுவதும் நறுமணத்துடன் இருக்க செய்யும்.

வாசனை திரவிய பாட்டிலை சரியாக சேமித்து வைக்கவும்

perfume new inside

வெளிப்புற வானிலை நிலைமைகளைப் பொறுத்து நமது அறை வெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாறும் வெப்பநிலை மற்றும் சூரிய ஒளியின் வெளிப்பாடு வாசனை திரவியங்களுக்கு நல்லதல்ல. எனவே வெப்பநிலை சீராக இருக்கும் இடத்தில் வாசனை திரவிய பாட்டில்களை வைத்திருப்பது நல்லது. வாசனை திரவியத்தை உங்கள் டிரஸ்ஸிங் டேபிளில் வெளியே வைப்பதை விட அலமாரியில் வைக்கலாம், முடிந்த வரை குளிர் மற்றும் இருண்ட இடத்தில் வைக்க வேண்டும்.

வாசனையைப் புரிந்து கொள்ள வேண்டும்

மேலும் படிக்க: மருதாணியை தலைமுடிக்கு இப்படி தடவினால் பலன் இரண்டு மடங்கு கிடைக்கும்!!

ஒவ்வொரு உடல் வகையும் வித்தியாசமானது இதனால் அது வெவ்வேறு வகையான வாசனை திரவியங்களுக்கு பதிலளிக்கிறது. பல்வேறு வகையான வாசனை திரவியங்களுக்கு உடல் எவ்வாறு நிலைகளில் பதிலளிக்கிறது என்பதை பரிசோதனை செய்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உடல் வாசனை வகையைப் புரிந்து கொள்ள நீங்கள் வாசனை திரவியங்களைச் சோதனை செய்து பயன்படுத்தலாம்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

Image Credit- Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP