குளிர்காலம் வந்துவிட்டால், எண்ணெய் பிசுக்கு சருமம் கொண்ட பெண்கள் சருமத்தை பராமரிப்பது பற்றி கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் குளிர் காலத்தில் சருமத்தில் அதிகமாக எண்ணெய் பிசுக்கு இருக்காது, எனவே சரும பிரச்சனைகள் வராது.
குளிர்காலத்தில் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு பிரச்சனை இல்லையென்றாலும் கூட, சருமத்தை தொடர்ந்து மாய்ஸ்சுரைஸ் செய்வதால், இறந்த செல்கள் மற்றும் சருமத்தில் கருமை படிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, சருமத்தை பராமரித்துக்கொள்ள 10-15 நாட்களுக்கு ஒரு முறை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும்.
எண்ணெய்ப் பிசுக்கு சருமத்தைப் பராமரிக்க சில சிறந்த ஸ்க்ரப்களை வீட்டிலேயே சுலபமாக தயார் செய்யலாம். இன்று இந்த பதிவில், குளிர்காலத்தில் எண்ணெய் பிசுக்கு சருமத்திற்கு வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தக்கூடிய சில ஸ்க்ரப்களை பற்றி தெரிந்துகொள்வோம்.
வால்நட் ஸ்க்ரப் எண்ணெய் பிசுக்கு சருமத்திற்கு மிகவும் நல்லது. வால்நட் பருப்புகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது, தேன் சருமத்திற்கு ஊக்கமளித்து, மென்மையாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் :இறந்த சரும செல்களை இயற்கையாகவே நீக்க முடியுமா? எப்படி?
பப்பாளி எல்லா சீசனிலும் எளிதாக கிடைக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. இதை பயன்படுத்தி வீட்டிலேயே ஸ்க்ரப் செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம் : குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை பராமரிக்க இயற்கை முறையில் க்ளென்சர் தயாரிக்கலாம்!!
ஆப்பிள் மற்றும் ஓட்ஸ் கலந்து எண்ணெய் பிசுக்கு சருமத்தில் தடவினால், சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்த ஸ்க்ரப் சருமத்தை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி, இறந்த செல்களை நீக்கி, சருமத்தை பளபளப்பாக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com