இன்றைக்குப் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களது சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அழகுநிலையங்களுக்குச் செல்வது முதல் விதவிதமான பேசியல் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனாலும் குளிர்காலம் போன்ற பிற பருவ காலங்களில் சருமத்தைக் கவனித்துக் கொள்வது என்பது அனைவருக்கும் சிக்கலாக இருக்கும். இதற்கு என்ன செய்யலாம் என தேடும் நாம், வீட்டு சமையல் அறையில் உள்ள முக்கியமான காய்கறியை மறந்துவிடுவோம்.
சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சமையல் அறையில் கிடைக்கும் கேரட் எப்படி உபயோகமாகிறது? இதனால் என்னென்ன பலன்களைப் பெற முடியும் என்பது குறித்த அழகுக்குறிப்புகள் இதோ உங்களுக்காக..
மேலும் படிக்க:குளிர்காலத்தில் பளபளப்பான சருமத்தைப் பெற வேண்டுமா? இந்த பேஸ் பேக்குகளை வீட்டிலேயே செய்திடுங்க!
சருமத்தைப் பொலிவாக்கும் கேரட்:
கேரட்டில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது சருமத்தில் உள்ள திசுக்களை சரி செய்யவும், சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளையும் பாதுகாக்கிறது. முகப்பருக்கள் பெண்களின் முக அழகைக் கெடுத்துவிடும். இதைத் தீர்ப்பதற்கு கேரட் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் முகப்பருக்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
குளிர்காலங்கள் வந்தாலே சருமம் வறண்டு முகத்தைப் பொலிவிழக்கச் செய்கிறது. அதிகளவு தண்ணீர் பருகும் போது சருமம் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்கச் செய்ய முடியும். எனவே நீரச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, சருமம் வறண்டு விடுவதைத் தடுக்க முடியும். இதோடு இதில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு உதவுகிறது.
முதுமையைத் தடுக்கும் கேரட்:
இன்றைக்கு சந்தைகளில் விற்பனையாகும் விதவிதமான சருமத்தைப் பராமரிக்கும் அழகு சாதன பொருட்களால் விரைவில் முதுமையான தோற்றத்தைப் பெற்று விடுகிறோம். இளமையில் ஏற்படக்கூடிய முதுமையான தோற்றம் மன உளைச்சலை ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக கேரட்டை உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை .ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. மற்றும் விரைவான வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. எனவே சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. இதோடு கேரட்டில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள் மற்றும் கருந்திட்டுகளைக் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க:உதடு வெடிப்புகளா? வீட்டிலேயே லிப் பாம் தயாரித்துப் பயன்படுத்துங்க!
பயன்படுத்தும் முறை:
கேரட் சாப்பிட்டால் கண்கள் நன்றாக தெரியும் என வார்த்தையை சிறு வயதில் இருந்தே கேள்விப்பட்டிருப்போம். கண்களுக்கு மட்டுமல்ல சருமத்தையும் எப்போதும் பளபளப்புடன் வைத்திருக்க கேரட்டை சாப்பிட வேண்டும். பச்சையாகவோ? சமைத்தோ? அல்லது ஜூஸாக சாப்பிடும் போது சருமம் பொலிவுடன் இருக்க உதவியாக இருக்கும்.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation