பெண்களின் அழகை மெருக்கூட்ட வேண்டுமா? இத மட்டும் செய்யுங்க போதும்!

கடலை மாவு, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், தக்காளி, சந்தனப்பொடி போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்களது முகத்தை அழகாக்கிக்கொள்ளலாம்.

beauty tips...

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெண்கள் தங்களை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான கூகுளில் என்ன செய்யலாம் என தேடுகிறீர்களா? இதற்காக அதிக விலைக் கொடுத்து அழகுச் சாதன பொருட்களை வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. நமக்கு எளிதில் மற்றும் விலை குறைவாக கிடைக்கும் பொருட்களை வைத்தும் அழகாக்கிக் கொள்ள முடியும். இதோ அவற்றில் சில உங்களுக்காக..

skin care tips ()

பெண்களை அழகாக்கும் இயற்கை பொருட்கள்:

மரிக்கொழுந்து:

பெண்களுக்கு கூடுதல் அழகைச் சேர்ப்பது அவர்களின் தலைமுடி. ஆனால் வறட்சி மற்றும் அழுக்கினால் ஏற்படக்கூடிய பொடுகுத் தொல்லை அவர்களின் அழகைக் கெடுத்துவிடும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மரிக்கொழுந்தை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தலையில் உள்ள பொடுகுத்தொல்லையை நீக்க உதவியாக இருக்கும்.

பயன்படுத்தும் முறை:

பெண்களின் தலையில் உள்ள பொடுகுத்தொல்லையைப் போக்குவதற்கு, ஒரு கப் மரிக்கொழுந்துடன் சிறிதளவு வெந்தயக்கீரையை உடன் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை தலையில் ஹேர் பேக் போன்று அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். இதையடுத்து குளிர்ந்த நீரைக் கொண்டு தலையை அலசினால் போதும் பொடுகுத் தொல்லை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.

கிவி பழம்:

பொடுகுத்தொல்லைக்கு அடுத்தப்படியாக பெண்கள் அதிகம் சந்திக்ககூடிய பிரச்சனைகளில் ஒன்று கழுத்தில் ஏற்படும் கருந்திட்டுகள். இவற்றை சரி செய்வதற்கு முயற்சி செய்பவர்கள், கிவி பழங்களைப் பயன்படுத்தலாம். கிவியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தில் உள்ள கருந்திட்டுகள் போக்குவதற்கு உதவியாக உள்ளது.

பயன்படுத்தும் முறை:

முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருப்பு மறைய வேண்டும் என்றால் கிவி பழங்களை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதை கழுத்து மற்றும் முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் முகம் மற்றும் கழுத்து பகுதியை காட்டன் துணியால் துடைத்தெடுக்கவும். இவ்வாறு தொடர்ச்சியாக வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளும் போது கொஞ்சம் கொஞ்சமாக கழுத்தில் உள்ள கருப்புகள் மறையக்கூடும்.

வேப்பிலை பொடி:

அடுத்தப்படியாக பெண்களின் சருமத்தைப் பாதிக்கும் மற்றொன்று முகப்பருக்கள். ஹார்மோன் மாற்றம், வயது, எண்ணெய் பிசுபிசுப்பு போன்ற பல்வேறு காரணங்களால் முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது. இவை பெண்களின் அழகைக் கெடுப்பதோடு, மாறாக வடுக்களாலும் கன்னத்தில் படிந்துவிடுகிறது. இதனால் பெண்கள் வெயிலில் செல்வதற்குக்கூட தயக்கம் காட்டுகிறார்கள். இதைத் தவிர்க்க விரும்பினால் நமக்கு எளிதில் கிடைக்கும் வேப்பிலையை உபயோகிக்கலாம். இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் முகத்தைப் பளபளபாக்குகிறது.

neem powder for face pack

பயன்படுத்தும் முறை:

வேப்பிலையை காய வைத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். அல்லது தற்போது கடைகளிலேயே வேப்பிலை பொடிகள் கிடைக்கிறது. இந்த வேப்பிலை பொடியை ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். பின்னர் முகப்பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்தால் போதும், முகத்தில் உள்ள பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.

மேலும் படிக்க:தலைமுடிக்கு மருதாணி பயன்படுத்துவதால் இத்தனைப் பாதிப்புகளா?

இதே போன்று கடலை மாவு, மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், தக்காளி, சந்தனப்பொடி போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு உங்களது முகத்தை அழகாக்கிக்கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP