
இந்த முக்கியமான சரும பராமரிப்பு விஷயத்தைப் புறக்கணிக்க உங்களுக்குப் பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் பொதுவானது சோர்வு மற்றும் சலிப்பு தன்மையாகும். நாளின் முடிவில் மிகவும் சோர்வாகவும் அல்லது சலிப்பு தன்மையுடனும் இருப்பதால் முகத்தை சுத்தப்படுத்துதல் மற்றும் ஈரப்பதமாக்குதல் ஆகியவற்றின் முழு செயல்முறையையும் மேற்கொள்வது ஒரு கடினமான பணியாகத் தோன்றலாம். இது உங்கள் சருமத்தை எவ்வளவு மோசமாக பாதிக்கும் என்பது தெரியுமா?, காற்றில் PMs, நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) எனப்படும் துகள்கள் மற்றும் பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் போன்ற இரசாயனங்கள் உள்ளதால் வெடிப்புகள், கரும்புள்ளிகள் மற்றும் தோல் வயதான செயல்முறையை அதிகப்படுத்தலாம். இவை தடிப்புகள், சூரிய ஒளி மற்றும் பிற தோல் தொடர்பான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பல் துலக்குதல், குளித்தல் மற்றும் CTM (சுத்தப்படுத்துதல், டோனிங், ஈரப்பதமாக்குதல்) போன்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்ய வேண்டியது போல் படுக்கைக்கு முன் முகத்தை கழுவுவதும் முக்கியம்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் முகத்தை எப்பொழுதும் கழுவி சுத்தம் செய்ய 4 காரணங்கள் உள்ளன. அவற்றின் காரணங்களை முழுமையாக தெரிந்துகொள்வோம்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன் மேக்கப்பை அகற்றுவது மிகவும் முக்கியம். இல்லையெனில் அது துளைகள் அடைப்பு மற்றும் தோல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீங்கள் நல்ல மேக்கப் ரிமூவரை பயன்படுத்தலாம், அதவது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்தி மேக்கப்பைத் துடைக்கலாம். ஒரு காட்டன் பேடில் சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லி அல்லது மேக்கப் ரிமூவரை தடவி, அதன் மூலம் மேக்கப்பை மெதுவாக அகற்றவும். ஒரு ஆய்வின்படி நமது தோல் 60 சதவிகிதம் வரையிலான இரசாயனங்களை உறிஞ்சுகிறது, இதனால் நமது துளைகளை அடைவதால் சருமத்தை சுவாசிக்காமல் தடுக்க செய்கிறது. எனவே, நீங்கள் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், படுக்கைக்குச் செல்லும் முன் எப்போதும் உங்கள் மேக்கப்பைக் கழற்றவும்.

Image Credit: Freepik
நமது சருமம் அழுக்கு, பாக்டீரியா, வியர்வை, மாசுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் ஆகியவற்றால் தொடர்ந்து சேதப்படுவதால் தூங்கச் செல்வதற்கு முன் முகத்தை சரியாகக் கழுவுவது அவசியம். இது பருக்கள், ஒயிட்ஹெட்ஸ் மற்றும் பிளாக்ஹெட்ஸ் ஆகியவற்றைத் தடுக்க செய்து ஆரோக்கியமான, மிருதுவான மற்றும் குறைபாடற்ற சருமத்தை அளிக்க உதவுகிறது.
மேலும் படிக்க: மெத்தையில் படிந்திருக்கும் துர்நாற்றத்தை போக்கி நல்ல நறுமணத்தை தரும் வீட்டு ஸ்ப்ரே
கண்ணைச் சுற்றியுள்ள தோலின் அடுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்ததாக இருப்பதால் முகத்தை நன்றாகக் கழுவி, படுக்கைக்குச் செல்வதற்கு முன் கண் கிரீம் தடவவும். கண் கிரீம்கள் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகளைத் தடுக்கவும், கண்களில் ஏற்படும் வீக்கத்தில் இருந்து விடுபடவும் உதவும்.

Image Credit: Freepik
சருமம் நாள் முழுவதும் ஃப்ரீ-ரேடிக்கல்களுக்கு தொடர்ந்து வெளிப்படும். இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் கொலாஜன் உற்பத்தியைத் தடுக்கலாம் மற்றும் சருமத்தை மந்தமாகவும் பழையதாகவும் மாற்றும். எனவே உறங்கச் செல்வதற்கு முன் முகத்தைச் சரியாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க: குளிர்காலத்தில் வறண்ட சருமத்தை மீட்டெடுத்து ஈரப்பதத்துடன் வைத்திருக்க ரோஸ் வாட்டர் டோனரை பயன்படுத்தவும்
உங்கள் அழகு அல்லது உணவு முறைகளில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், அதை தொழில்முறை மருத்துவ ஆலோசனையாகக் கருதுவது நல்லது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com