நமது சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் காட்டுவதற்கு நாம் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகளும் நமது சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் தான் நாம் எப்போதும் வீட்டு வைத்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
குளிர்காலத்தில் சருமத்தை அழகாக பராமரிக்க, இன்று ரோஜா பூவால் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரப் பற்றி பார்க்கவிருக்கிறோம், இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நல்ல பளபளப்பைக் கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: செம்பருத்தி டீ குடிப்பதால், சருமம் அழகாகும் தெரியுமா!!!
ரோஸ் வாட்டர் அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். இது நமது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களையும் குறைக்கிறது. தினமும் இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்திற்குப் புதிய பொலிவைத் தரும்.
ரோஜா இதழ்கள் உடல் சூட்டை குறைத்து குளுர்ச்சிக்கு பெறுவதற்கு சிறந்த மருந்து. ரோஜா இதழ்கள் முகத்திற்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதனை சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் அல்சர் பிரச்சனை குணமாகி வயிறு குளிர்ச்சியாக இருக்கும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com