Saree Draping Tips: தமிழர்களின் பாரம்பரிய கொசுவ புடவைகள் கட்டும் முறை!.

70 மற்றும் 80 களில் உள்ள பெரும்பாலான பெண்கள் அணியக்கூடிய சேலை வகைகளில் ஒன்று தான் கொசுவ சேலைகள்

kandanki saree method

பெண்களையும்,புடவைகளையும் தனியே பிரிக்க முடியாது. ஆண்கள் எத்தனைக் கலைகளில் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் பெண்கள் கட்டும் புடவைகளுக்கு ஈடாகாது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு விதமாக புடவைகளைக் கட்டும் வழக்கம் உள்ளது. இது அவர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் விதமாக அமையக்கூடும். இதோ இன்றைக்கு தமிழர்களின் பாரம்ரிய கொசுவ சேலைகள் எப்படி கட்டுவது? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.

kosuvam saree

கொசுவ சேலைகள்:

70 மற்றும் 80 களில் உள்ள பெரும்பாலான பெண்கள் அணியக்கூடிய சேலை வகைகளில் ஒன்று தான் கொசுவ சேலைகள். பின்பக்கம் மடிப்பு வைத்துக் கட்டுவதே தனி அழகு. தமிழக பெண்களின் பாரம்பரிய புடவைகளில் ஒன்றாக கொசுவ சேலைகளைக் கட்டும் பழக்கம் குறைந்துவிட்டது. மாறாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறக்கூடிய விழாக்களில் தான் கொசுவம் வைத்து புடவைக்கட்டுகிறார்கள். இனி நீங்களும் கொசுவ புடவைகளைக் கட்ட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தால், இதோ எப்படி என இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

கொசுவம் வைத்து புடவைக் கட்டும் முறை:

  • தமிழர்களின் கலாச்சாரங்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது கண்டாங்கி எனப்படும் பின் கொசுவ சேலைகள். இந்த மாடலில் புடவைகள் கட்ட வேண்டும் என்றால் முதலில் முன்பக்கம், பின்பக்கம் என்பதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். உள்பாவடையையும் குட்டையாக அணிய வேண்டும்.
  • இதையடித்து கீழ் முந்தியில் 4 மடிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இதை முதுகு தண்டின் நடுப்பகுதியில் வைத்து பாவடைக்குள் சொருக வேண்டும். சரிசமாக வைத்து பின்புறமாக சொருக வேண்டும்.
  • பின்னர் மீதமுள்ள புடவையை உடம்பை சுற்றி சொருகிக் கொள்ளவும்.இதையடுத்து மேல் முந்தாணைக்கான மடிப்புகளை வைத்து பின் செய்துக் கொள்ளுங்கள்.
  • நீங்கள் கட்டும் புடவை L வடிவத்தில் வருமாறு பார்த்துக் கொள்ளவும். மேல் முந்தியின் முதல் ப்ளீட்ஸை எடுத்துக் கொசுவம் உள்ள இடத்திற்கு அருகில் சொருக வேண்டும்.
  • இறுதியில் மடிப்புகளை ஒவ்வொன்றாக சரிசெய்தால் போதும், தமிழர்களின் பாரம்பரிய கொசுவ சேலைகளை ஈஸியாக கட்டிக் கொள்ள முடியும்.

madisar

கொசுவ புடவைகளைப் போன்று தமிழகத்தில் ஐயங்கார் மாடல் புடவைகளையும் பாரம்பரிய முறைகளில் ஒன்றாக இருந்தது. இந்த முறையில் புடவைக் கட்டுவதற்கு 8.3 மீட்டர் அளவு தேவைப்படும்.

  • இந்த புடவைகளைக் கட்டும் போது, புடவையின் ஒரு பக்கம் இருக்கக்கூடிய நுனியை உடம்பு முழுவதும் சுற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு துணியை நுனிப்பகுதியுடன் முடிச்சு போட்டுக் கொள்ளவும்.
  • பின்னர் சிறிது சிறிதாக நான்கு ப்ளீட்களை வைத்து இடுப்புப் பகுதியில் சொருகிக் கொள்ளவும். மீதமிருக்கும் துணியை கால்களின் நடுப்பகுதியில் நுழைத்து பின்புறம் இடுப்புப் பகுதியில் சொருகிக் கொள்ள வேண்டும். புடவையின் பார்டர் தெரியும் படி கட்டியிருந்தால், பார்ப்பதற்கு நிச்சயம் அவ்வளவு அழகாகத் தெரியும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP