
உடலின் சில பகுதிகள் கருப்பாக மாறும். அதிலும் முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் கழுத்து பகுதிகள் எளிதில் கருத்து போகும். தனி கவனம் எடுத்து இந்த பகுதிகளைப் பராமரிக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இல்லையெனில், அவற்றின் நிறம் இன்னும் கருமையாகி விடும். அந்த பகுதிகளைச் சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க ஸ்க்ரப்பை பயன்படுத்தலாம்.
பெரும்பாலான இயற்கை பொருட்கள் சருமத்திற்கு நல்லவை. ஆனால் அவை சரும வகைக்கு ஏற்ப மாறுப்பட்டு செயல்படுகின்றன. மார்க்கெட்டில் விற்கப்படும் சில பொருட்கள் சருமத்திற்குக் கடுமையானவை. அதனால் தான் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். எனவே, இன்று இந்த பதிவில் வீட்டிலேயே ஸ்க்ரப் செய்வது எப்படி? என்பதை உங்களுக்கு சொல்ல போகிறோம். அத்துடன் கை மற்றும் கால்களின் முட்டி பகுதி கருமையாக மாறுவதற்கான காரணம் மற்றும் அதை சரிசெய்யும் முறைகள் குறித்தும் பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்: பாத வெடிப்பை சரிசெய்யும் வீட்டு வைத்தியம்
எண்ணெய்கள் சருமத்திற்கு பல வழிகளில் நன்மை செய்கின்றன. அதனால்தான் எண்ணெய்கள் சரும பராமரிப்பு முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணெய்களில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடலின் கருமையானப் பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன.
முதலில் தேங்காய் எண்ணெய்யுடன் ஆலிவ் ஆயில் மற்றும் எள்ளு சேர்க்கவும். இவற்றை நன்கு கலந்து பேஸ்ட் போல் தயார் செய்யவும். இப்போது வீட்டிலேயே தயாரித்த பேக் தயார்.
இந்த பதிவும் உதவலாம்: கழுத்து கருமை நீங்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com