முடி அடர்த்தியாகவும் கரு கருன்னு வளர வேண்டும் என்ற ஆசையில் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களை பார்த்து பலரும் ஒவ்வொரு நாளும் புது புது ஷாம்பூ பயன்படுத்துகின்றனர். இப்படி செய்வதால் பலருக்கும் முடி வேகமாக கொட்டுகிறது. அதே போல ஹெல்மெட் அணிந்தால் வியர்வை தலைமுடியில் படிகிறது. வியர்வை படிந்தாலும் தலைமுடி பாதிக்கப்படாமல் இருக்க தலைக்கு அடிக்கடி குளிக்க வேண்டும் அல்லது முடியை கழுவ வேண்டும். தலைமுடியை பராமரிக்க தவறினால் வியர்க்குரு, அரிப்பு ஏற்படலாம். அதே போல சிலருக்கு முடியின் இயற்கையான கருமை குறைந்து செம்பட்டையாக மாறிடும். இதற்கு மூலிகை சிகிச்சை உள்ளது. கீரை ஹேர் பேக் கொண்டு தலைமுடியை கரு கருன்னு மாற்றுவது எப்படி என பார்க்கலாம்.
(குறிப்பு - பசலக்கீரை இல்லையெனில் பொன்னாங்கண்ணி கீரை கூட பயன்படுத்தலாம்)
பசலக்கீரையில் நிறைய இரும்புச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதற்கு மட்டுமல்ல தலைமுடிக்கு பயன்படுத்தினாலும் நன்மை பயக்கும். செம்பருத்தி பூ இயற்கையாக நிறைய நுரை வெளியேற்றும். வெந்தயக் கீரை முடி வளர்வதற்கும், அரிப்பை குறைப்பதற்கும் உதவும். கற்றாழை தலைமுடிக்கு ஈரப்பதம் கொடுக்கும். தயிர் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டது.
5-6 பசலக்கீரை, ஒரு செம்பருத்தி பூ, ஒரு கைப்பிடி வெந்தயக் கீரை, கற்றாழை 5-7 துண்டுகள், தயிர் மூன்று ஸ்பூன் சேர்த்து அரைக்கவும். அவ்வளவு தான் கீரை ஹேர் பேக் ரெடி.
இதை தலைமுடியில் நன்கு தடவி 15 நிமிடம் ஊறவிட்டு கழுவவும். இந்த கீரை ஹேர் பேக் முழு உடலுக்கும் குளிர்ச்சியை தரும். அதன் பிறகு தலைமுடியை கழுவுவதற்கு ஷாம்பூ அல்லது சீயக்கய் பயன்படுத்தலாம். கீரை ஹேர் பேக்கினால் முடிக்கு ஊட்டச்சத்து கிடைத்து கரு கருன்னு மாறும். செம்பட்டை முடி கொண்டவர்கள் கீரை ஹேர் பேக் தவறாமல் பயன்படுத்தலாம். வெந்தயக் கீரை கிடைக்கவில்லை எனில் 4-5 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து அரைத்து பயன்படுத்தலாம். வாரத்தில் இரண்டு - மூன்று நாட்களுக்கு இந்த கீரை ஹேர் பேக் பயன்படுத்தி தலைக்கு குளிக்கவும்.
கீரை ஹேர் பேக் மட்டுமல்ல எந்த ஹேர் பேக் பயன்படுத்துவதற்கு முன்பாகவும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com