herzindagi
pimple free big  image

முக கருமை மற்றும் பருக்களைச் சட்டென்று நீக்கச் செய்யும் அருமையான வீட்டு வைத்தியன்.. செய்து பார்க்க மறக்காதீர்

சருமத்தைப் பராமரிக்கச் சந்தையில் பொருட்களை வாங்குவதற்குப் பதிலாக நீங்கள் வீட்டு வைத்தியத்தின் உதவியைப் பெறலாம்
Editorial
Updated:- 2024-04-24, 21:29 IST

நாம் அனைவரும் அழகாக இருக்க விரும்புகிறோம் இதற்காக ஒவ்வொரு நாளும் நமது சரும பராமரிப்பு வழக்கத்தில் பல மாற்றங்களைச் செய்து வருகிறோம். இன்று சந்தையிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்குப் பதிலாகப் பெண்கள் பலரும் இயற்கையான மற்றும் வீட்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை முயற்சிக்க விரும்புகிறார்கள்.

பல சமயங்களில் வயதுக்கு முன்னரே சருமத்தில் புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். இந்த நாட்களில் இது ஒரு பொதுவான விஷயமாகிவிட்டது. ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியம். எனவே சருமத்தை எளிதாகக் கவனித்துக்கொள்ளவும். சரும நிற மாறுதல் மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவும் வீட்டு வைத்தியத்தைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: கருமையாக இருக்கும் முகம் உடனடியாக கலரா மாற சார்க்கோல் ட்ரை பண்ணுங்க!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளைக் குறைக்கப் பயன்படுத்த வேண்டும் பொருட்கள்

  • உருளைக்கிழங்கு
  • அலோ வேரா ஜெல்

கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவினால் நடக்கும் நன்மைகள் 

Aloe verab gel inside

  • வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-பி ஆகியவை கற்றாழை ஜெல்லில் உள்ளதால் இது சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது.
  • இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.
  • இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்தை அனைத்து வகையான தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

சருமத்திற்கு உருளைக்கிழங்கு தரும் நன்மைகள்

potato inside

  • கரும்புள்ளிகளைக் குறைக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
  • சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெயைக் குறைக்க உதவுகிறது.
  • சரும சுருக்கங்கள் மற்றும் சரும பதனிடுதல் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.

முகப்பருவை குறைக்க வீட்டு வைத்தியம்

  • முதலில் 1 உருளைக்கிழங்கை மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் போடவும்.
  • இப்போது கற்றாழை செடியிலிருந்து இலைகளைப் பறித்து அதில் உள்ள ஜெல்லை பிரித்தெடுக்கவும்.
  • இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து பிரஷ் மூலம் முகத்தில் தடவவும்.
  • பேக்கை முகத்தில் சுமார் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
  • அதன்பிறகு தண்ணீர் மற்றும் பருத்தி உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யலாம்.
  • இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை முயற்சி செய்யலாம்.
  • இந்த வீட்டு வைத்தியத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சில நாட்களில் உங்கள் சருமத்தில் மாற்றங்களைக் காண்பீர்கள்.

மேலும் படிக்க: ரோஜா இதழ்களை போல் முகம் ஜொலிக்க இரவில் செய்யவேண்டிய அழகு குறிப்புகள்!

குறிப்பு: எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன் நீங்கள் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம். ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.

முகப்பருவைக் குறைக்கும் இந்த வீட்டு வைத்தியம் மற்றும் சருமத்திற்கு அது தரும் நன்மைகள் உங்களுக்கு பிடித்திருந்தால், இந்தக் கட்டுரையைப் பகிர மறக்காதீர்கள். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com