கூந்தல் பராமரிப்பு: முட்டையின் வெள்ளை கருவினால் உங்கள் கூந்தலுக்கு இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!!

முட்டையின் வெள்ளைக்கரு கொண்டு முடியை பராமரிப்பது எப்படி என்பதை படித்தறிந்து பயன்பெறலாம்.

egg white big

முட்டையினால் கிடைக்கும் பலன்கள்: கூந்தலை சரியான நேரத்தில் நாம் பராமரிக்க வேண்டும். அப்போது தான் கூந்தல் எப்போதும் மென்மையாக இருக்கும்.

(எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும் கூந்தலுக்கு வெள்ளை கரு எப்படி உதவும்) பெண்கள் எல்லோருமே ஆரோக்கியமான கூந்தலை தான் விரும்புவார்கள். இதற்காக, பல வித முயற்சிகளை தினமும் செய்கிறார்கள்.

பெண்கள் அழகு நிலையங்களுக்கு சென்று மணிக்கணக்கில் தங்களுடைய கூந்தலுக்காக செலவு செய்கின்றனர்.

வெயில் காலத்தில், உங்களின் கூந்தல் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும்.

இதற்கு காரணம், சூரியஒளியினால் உண்டாகும் வெப்பம் தான். அது, உங்களின் உச்சந்தலையை எண்ணெய் பிசுபிசுப்புடன் வைத்திருக்கிறது.

ஆனால், கூந்தலை வீட்டிலிருந்தே பராமரிக்க முடியும் என்பதை பெண்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதனால், எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி உங்களால் கூந்தலை மென்மையாக வைத்துக்கொள்ள முடியும்.

ஆய்வின் மூலம் நமக்கு தெரிவது என்னவென்றால், வெள்ளை கரு பெண்களின் கூந்தலுக்கு நற்பலன் அளிக்கிறது என்பதாகும்.

வெள்ளை கருவினை கூந்தலுக்கு பயன்படுத்துவது எப்படி?

egg white

  • கூந்தலில் வெள்ளை கருவினை பயன்படுத்த, முதலில் ஸ்பூனை கொண்டு முட்டையை உடைத்து கொள்ளவும்
  • பிறகு, முட்டையின் வெள்ளை கருவினை மட்டும் ஒரு தனி பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்
  • அதன்பிறகு, 2 முதல் 3 சொட்டு எலுமிச்சை சாறை வெள்ளைக்கரு ஊற்றி வைத்திருக்கும் கிண்ணத்தில் கலக்க வேண்டும்
  • இவ்வாறு எலுமிச்சை சாறை சேர்க்கும்போது முட்டையில் இருந்து வரக்கூடிய வாடை போய்விடும்
  • இதனை நன்றாக கலந்துகொண்டு, கூந்தலின் வேர் முதல் அடிப்பகுதி வரை தடவவும்
egg white
  • 40 நிமிடங்களுக்காவது இதனை அப்படியே விட்டுவிடவும்
  • பிறகு சுத்தமான நீரை கொண்டு உங்கள் கூந்தலை அலசவும்
  • இதனை வாரத்துக்கு இரண்டு முறையாவது செய்து வரவேண்டும்
  • இவ்வாறு தொடர்ந்து பின்பற்றி வர, உங்களுடைய கூந்தல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்க தொடங்கும்
  • மேலும் கூந்தலில் இருக்கும் எண்ணெய் பரவாமலும் இருக்கும்

முட்டையின் வெள்ளை கருவினால் கூந்தலுக்கு கிடைக்கும் பலன்கள்

egg white

  • முட்டையில் புரதச்சத்து உள்ளது, இது வேர்களில் இருந்து கூந்தலை வலுப்படுத்த உதவுகிறது
  • முட்டையின் வெள்ளை கரு, உச்சந்தலையில் உள்ள எண்ணெய்யை சுத்தப்படுத்த உதவுகிறது
  • முட்டை, கூந்தலில் உருவாகும் பொடுகை போக்கவும் உதவுகிறது
  • முட்டையின் வெள்ளைக்கரு கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது
egg white
  • மேலும், முட்டையில் உள்ள மூலப்பொருட்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கிறது
  • எலுமிச்சையில் ஆக்சிஜனேற்ற தன்மை உள்ளது. இதனால் கூந்தலுக்கு நீர்ச்சத்தை வழங்க உதவுகிறது
  • இதனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்பு, கூந்தலில் பாக்டீரியா உருவாகாமல் பாதுகாக்கிறது

இந்த டிப்ஸை முயன்று பார்த்து வீட்டிலேயே நீங்கள் கூந்தலை பராமரிக்கலாமே.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யவும், ஷேர் செய்யவும், கமெண்ட் செய்யவும். மேலும், ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: shutterstock, freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP