விளக்கெண்ணெய் என்பது ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். இது உங்கள் அழகுக்கு நன்மை சேர்க்கும். இதை பல அழகு சாதன தயாரிப்பு நிறுவனங்களும் நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணெய் சற்று கெட்டியாகவும், பிசுபிசுப்பு தன்மையுடனும் இருக்கும். மேலும் இதை பயன்படுத்தும் போது நீங்கள் சற்று கனமாக உணரலாம், ஆனால் அதை உங்கள் சருமம் மிக விரைவாக உறிஞ்சிக் கொள்ளும். இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.
இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, அதை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இக்காரணத்தினால் முடி உதிர்வு குறைந்து, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். இது கடுமையான ரசாயனங்களால் ஏற்படும் முடி சேதத்தையும் குறைக்கிறது. மேலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
முடி உதிர்வைத் தடுக்க விளக்கெண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இது குறித்த தகவல்களை, RVMUA அகாடமியின் நிறுவனரும், பிரபல ஒப்பனை கலைஞரும், சரும பராமரிப்பு நிபுணருமான ரியா வசிஷ்ட் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
விளக்கெண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய்
தலைமுடிக்கு நன்மை தரக்கூடிய வேப்ப எண்ணெயை விளக்கெண்ணெயுடன் கலந்து முடிக்கு தடவலாம்.
தேவையான பொருட்கள்
- வேப்ப எண்ணெய் - 2 துளிகள்
- விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- முதலில் வேப்ப எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெயை கலந்து கொள்ளவும்.
- இப்போது இதை உங்கள் தலைமுடிக்கு தடவவும்.
- பிறகு ஒரு சூடான துண்டை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை மூடி வைக்கவும்.
- அரை மணி நேரம் கழித்து முடியை அலசலாம்.
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தலைமுடிக்கு தடவலாம். இதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சுத்தமான தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
- விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- முதலில் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கவும்.
- இதனுடன் விளக்கெண்ணெயை சேர்த்து கலக்கவும்(அடர்த்தியான கூந்தல் பெற இதனுடன் ஒரு துளி கிராம்பு எண்ணெயை சேர்க்கலாம்).
- இந்த கலவையை கொண்டு உங்கள் தலை முடியை மசாஜ் செய்யவும்.
- முடிக்கு ஸ்டீம் செய்யலாம் அல்லது சூடான துண்டை பயன்படுத்தி தலைமுடியை மூடி வைக்கலாம். பின் 20 நிமிடம் கழித்து முடியை அலசவும்.

விளக்கெண்ணெய் மற்றும் கிளிசரின்
கிளிசரின் பல அழகு நன்மைகளைக் கொண்டுள்ளது. இதை நீங்கள் விளக்கெண்ணெயுடன் கலந்து தடவலாம். இவை இரண்டுமே கெட்டி தன்மையுடன் இருப்பதால், இதனுடன் கொஞ்சம் தேங்காய் எண்ணெயையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கிளிசரின் - ½ டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- முதலில் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கவும்.
- பிறகு இதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்புவை பயன்படுத்தி முடியை அலசலாம்.
விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயில் உள்ள வைட்டமின் E தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது இதை விளக்கெண்ணெயுடன் சேர்த்து தடவலாம்.
தேவையான பொருட்கள்
- பாதாம் எண்ணெய் - 8-10 சொட்டு
- விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்
- வேப்ப எண்ணெய் - 2 சொட்டு
இந்த பதிவும் உதவலாம்: இயற்கையான இந்த 2 பொருட்களைக் கொண்டு பொடுகை போக்கலாம்.
பயன்படுத்தும் முறை
- முதலில் விளக்கெண்ணெயுடன் பாதாம் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெயை கலக்கவும்.
- இதை உங்கள் உச்சந்தலைக்கு தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.
- சிறிது நேரம் கழித்து தலை முடியை மென்மையான ஷாம்புவை கொண்டு அலசலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் பளீச் முகத்திற்கு கைக்கொடுக்கும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation