ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவதற்கு முந்திரி உதவுமா?

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

cashew for hair care

முந்திரி நடஸ் வகைகளில் ஒன்று என்றும் இதை தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது, உடலுக்கு ஆரோக்கியத்தைச் சேர்க்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அதே சமயம் முந்திரியைச்ச சாப்பிடுவதால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இல்லையென்றால் வாருங்கள் இங்கே அறிந்துக் கொள்ளலாம்.

cashew

முடி வளர்ச்சிக்கு உதவும் முந்திரி:

பெண்களுக்கு கூடுதல் அழகைச் சேர்ப்பது எப்போது அவர்களின் தலை முடி தான். நீளமாகவும், சுருட்டையாகவும் இருந்தாலும் பெண்களுக்கு தனி அழகைக் கொடுககும். ஆனால் இன்றைக்கு பல பெண்கள் சந்திக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது முடி உதிர்தல். கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் பயன்பாடு, ஊட்டச்சத்துள்ள உணவு முறையைப் பின்பற்றாமல் இருத்தல், முறையான பராமரிப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாகிவிட்டது.

இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக கற்றாழை, சீயக்காய், நெல்லிக்காய் போன்றவற்றில் தயாரிக்கப்படும் ஷாம்புகள் முதல் ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் முடி வளர்ச்சிக்கு பெண்கள் எடுத்துக் கொள்கின்றனர். இந்த வரிசையில் இன்றைக்கு முடி வளர்ச்சிக்கு எப்படி முந்திரி உதவியாக உள்ளது? அதில் என்னென்ன நன்மைகளை நாம் பெற முடியும்? என்பது குறித்த விளக்கம் இங்கே.

hair loss ()

  • முந்திரியில் ஃபைபர், புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், முடியின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.
  • முந்திரியில் உள்ள வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் இரத்த ஒட்டத்தை மேம்படுத்து தலைமுடி வேரிலிருந்து வளர்வதற்கு உதவியாக உள்ளது.
  • இன்றைக்கு முடி உதிர்தல் பிரச்சனையை ஆண்கள் முதல் பெண்கள் வரை அதிகம் சந்தித்துவருகின்றனர். இளம் வயதிலேயே அதிகளவில் முடி கொட்டும் பிரச்சனையால் அவதிப்படும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், முந்திரியை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் முடி உதிர்வைக் குறைக்க உதவுவதோடு, ஆரோக்கியமாக தலைமுடி வளர்வதற்கு உதவுகிறது.
  • முடி உதிர்தலுக்கு அடுத்தப்படியான பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பொடுகு. இதை சரிசெய்வதற்கு முந்திரி உங்களுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க:கழுத்தில் கருப்பா இருக்கா? சரி செய்வதற்கான வீட்டு வைத்தியம் இது தான்!

hair growth

இதுபோன்று பல்வேறு நன்மைகள் உள்ளதால், இனி சாலட், நெய் அல்லது எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுதல் போன்ற பல வழிகளில் நீங்கள் முந்திரியைச் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். நிச்சயம் உங்களது முடியை ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவியாக இருக்கும்.

Image soure- google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP