பண்டைய காலத்தில் இருந்தே சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் இடம்பெற்று வருகிறது. தேங்காய் எண்ணெயை உங்கள் முகத்திற்கு பயன்படுத்தி இருக்கிறீர்களா? குறிப்பாக இரவு நேரத்தில்? இன்றைய பதிவில் இரவு நேரத்தில் முகத்திற்கு திங்காய் எண்ணெய் தடவுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை பார்க்கலாம்.
பலரும் விலை உயர்ந்த சிகிச்சைகள் மற்றும் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்தி சருமத்தின் இளமையை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் இது போன்ற சிகிச்சைகள் எப்போதும் பலன் தருவதில்லை. இந்நிலையில் இயற்கையான பொருட்களை கொண்டு சருமத்தின் இளமையை தக்க வைத்துக் கொள்ளலாம். சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறையும் பொழுது இளம் வயதிலேயே சருமம் முதிர்ச்சி அடைய தொடங்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: முடி கொட்டுவதை நிறுத்த வீட்டிலலேயே என்ன செய்யலாம் தெரியுமா?
கொலாஜன் பற்றாக்குறையினால் சருமத்தில் சுருக்கம், தொய்வு போன்ற பல சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் சருமத்தின் இறுக்கத் தன்மையை பராமரிக்கவும் இளமையாக வைத்துக் கொள்ளவும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின் A, மற்றும் E சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் முகத்திற்கு தேங்காய் எண்ணெய் தடவலாம்.
உங்கள் முகத்தில் கருமையான திட்டுகள் அல்லது கரும்புள்ளிகள் இருந்தால் விலை நிறைந்த கிரீம்களுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் ப்ளீச் ஆகவும் செயல்படுகிறது. இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்து சரும பொலிவை அதிகரிக்கும். தினமும் இரவு முகத்தை கழுவி சுத்தம் பிறகு தேங்காய் எண்ணெயை முகத்திற்கு தடவ வேண்டும். இதை பின்பற்ற தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே நல்ல விளைவுகளை காணலாம்.
சரும அழற்சியை குறைக்க தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை உள்ளிருந்து குணப்படுத்துகின்றன. இரவில் தூங்குவதற்கு முன் தேங்காய் எண்ணெயை தடவி வர நல்ல பலன்களை விரைவில் காணலாம்.
சருமத்தை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இதற்கு உதவக் கூடிய பல வகையான கிரீம்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தேங்காய் எண்ணெயில் 80-90% நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன, இது சரும வறட்சியை தடுக்கின்றன. சருமத்தில் ஏற்படும் நீர் இழப்பை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயை தடவலாம். இது உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். இதனால் சருமம் வறட்சி அடையாது.
பொதுவாக எண்ணெய் பசை உள்ள சருமத்தில் முகப்பரு ஏற்படும். தேங்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகின்றன. இதில் உள்ள லாரிக் அமிலம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கின்றன. இதனால் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கலாம். மேலும் சருமத்தில் முகப்பருக்கள் இருந்தாலும் இரவு தூங்க செல்வதற்கு முன் முகத்திற்கு தேங்காய் எண்ணெயை தடவலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சருமத்தை பொலிவாக்க இதை செய்தாலே போதும்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com