herzindagi
how to remove dull skin

Dull Skin Tips : சருமத்தை பொலிவாக்க இதை செய்தாலே போதும்

 சருமத்தை பொலிவாக்க என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். பொலிவிழந்த முகத்தை இனி ஈஸியாக பிரகாசமாக்கலாம். 
Editorial
Updated:- 2023-07-19, 08:25 IST

சரும பராமரிப்பு என்பது பெண்கள் கட்டாயம் பின்பற்றக்கூடியது. சருமத்தை பாதுகாக்க, அழக்காக, பளபளக்க செய்ய சரும பராமரிப்பு முரைகள் மிகவும் உதவுகின்றன. ஒரே நாளில் முகத்தை பளீச்சென  மாற்ற முடியாது. ஆனால் டெய்லி ஸ்கின் கேர் செய்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம். எனவே, முகத்தை பொலிவாக பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு விஷயங்கள் பற்றி பார்ப்போம். 

முகத்தை பொலிவாக்க உடலில் கொலாஜன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். உள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.  சரும புத்துயிர் பெற  கொலாஜன் அவசியம். , உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், உணவில் ஒமேகா -3 இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் சப்ளிமெண்ட்ஸ் நோக்கி ஓடுகிறார்கள், ஆனால் இயற்கை பொருட்களை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இதன் காரணமாக, உடலில் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது.

செம்பருத்தி பொடி

முகத்தை பொலிவாக்க செம்பருத்தி பூக்களை நிஅலில் காய வைத்து அதை பொடியாக்கி முகத்தில் தயிர், பால் அல்லது டேனுடன் சேர்ந்து முகத்தில் தடவினால் நல்ல ரிசலட் கிடைக்கும். 

 

face surcb

 

தேவையான பொருட்கள்

  • 1 டீஸ்பூன் செம்பருத்தி தூள்
  • 1 டீஸ்பூன் அரிசி மாவு
  • 2 டீஸ்பூன் தக்காளி சாறு
  • 1 டீஸ்பூன் தயிர்

 

நன்மைகள் 

அரிசி மாவு  உங்கள் சருமத்தை மேம்படுத்த உதவும். வைட்டமின்-சி உடன் சருமத்திற்கு தேவையான பல என்சைம்களை கொடுக்க தக்காளி சாறு அவசியம்.  தக்காளியில் இயற்கையான லைகோபீன் உள்ளது, இது தோல் புத்துணர்ச்சிக்கு நல்லது.சருமத்தை இறுக்கமாக்குவதற்கு லாக்டிக் அமிலமும் மிகவும் முக்கியமானது, எனவே தயிர் பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த பொருட்கலை நன்கு மிக்ஸ் செய்து முகத்தில் தடவவும். பின்பு முகத்தைல் நீரால் சுத்தம் செய்தால் முகம் பளீச்சிடும். இதை வாரத்திற்கு 2 முரை கட்டாயம் செய்தால் சருமம் இயற்கையாகவே பொலிவாகும். 

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

 

 Images Credit: freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com