herzindagi
hair fall control tips

Hair Fall Control : முடி கொட்டுவதை நிறுத்த வீட்டிலேயே என்ன செய்யலாம் தெரியுமா?

 முடி கொட்டுவதை நிறுத்த வீட்டிலலேயே என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். முடி உதிர்தல் என்பது இன்றைய காலக்கட்டத்தில் முக்கிய பிரச்சனையாக மாறி வருகிறது. 
Editorial
Updated:- 2023-07-27, 15:45 IST

 தலைமுடி அதிகம் உடைவதாலும் அடிக்கடி முடியை அலச முடியாமல் போவதாலும்  முடி உதிர்தல் பிரச்சனை மிகப்பெரிய தொந்தரவாக உருவெடுக்கிறது.  இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடி உதிர்ந்து அதன் அளவு பாதியாக குறைவதற்கு முன்பே சில வழிமுறைகளை பின்பற்றி முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம். சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப்பின்  முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகளை நம்முடன் பகிர்கிறார்.

முடி பராமரிப்பு

  • முடியின் வகைக்கு ஏற்ப அதனை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் முடி உடைய தொடங்கும்.  எனவே, பிசுபிசுப்பான தலைமுடி உள்ளவர்கள் எப்போதுமே மைல்டு ஷாம்பூவை பயன்படுத்துவது நல்லது. 
  • தலைமுடியை ஸ்ட்ரெய்னிங், பெர்மிங் (சுருள செய்வது) கலரிங் செய்யும் போது முடிக்கு அதிக சேதம் ஏற்படுகிறது. இப்படி செய்வதால் முடியின் அமைப்பு மோசமாகவும் மாறி விடுகிறது. 

 

 

 

womnen hair fall tips

 

 

  • குளிர்காலத்தில் தலைக்கு ஷாம்பு பயன்படுத்துவது உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதுடன் தொற்று ஏற்படுவதையும் தடுக்கும்.  ஜாவேத் ஹபீப்பின்  கூற்றுப்படி இதற்காக, விலையுயர்ந்த ஷாம்புகளை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.
  • முடி உதிர்வை தடுக்க தலைக்கு குளிப்பதற்கு முன்பு ஆலிவ் ஆயிலை கொண்டு முடியை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்த பின்பு தலைக்கு ஷாம்பு தேய்த்து குளிக்க வேண்டும். எல்லோரும் முடியை அலசிய பின்பு கண்டிஷ்னர் போடுவார்கள். ஆனால் இது தலைக்கு குளிப்பதற்கு முன்பே போடப்படும் கண்டிஷ்னர் போன்றது.

 

வேப்பிலையை பயன்படுத்தவும்

 தலையில் பொடுகு மற்றும் அழுக்கு இருக்கும்போது முடி அதிகம் உதிரலாம். இந்த நேரத்தில்  வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து  கொதிக்க வைத்து அந்த நீரினால் தலைமுடியை அலசவும். 

வெங்காயம்

வெங்காயத்தின் சாறை பஞ்சில் நனைத்து அந்த பஞ்சை தலைமுடியின் வேர்களில் தடவவும். பின்னர் அதிக கெமிக்கல் இல்லாத மைல்டு ஷாம்பூ மூலம் முடியை அலசவும். இது முடி உதிர்வை கட்டுப்படுத்தும். 

 

சிகையலங்கார நிபுணர்  ஜாவேத் ஹபீப்பின் கூறிய  இந்த டிப்ஸ்களை முறையாக பின்பற்றி குளிர்காலத்தில் அதிகரித்து வரும் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

 

 Images Credit: freepik

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com