முகத்தில் கருந்திட்டுக்களைப் போக்க உதவும் வில்வபழம்; பயன்படுத்தும் முறை

வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, மாசு போன்ற பல்வேறு காரணங்களால் முகத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படுகிறது.
image
image

பெண்களின் சரும அழகைப் பாதிக்கும் முக்கிய சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது பிக்மென்டேஷன் எனப்படும் கருந்திட்டுகள். கன்னம், நெற்றி போன்ற பாகங்களில் திடீரென கருந்திட்டுகள் வருவதை நிச்சயம் அனைவரும் பார்த்திருப்போம். வெயில், சோப்பு மற்றும் பிற அழுகு சாதனப் பொருட்களை மாற்றி உபயோகித்தல் போன்ற பல காரணங்களால் வந்திருக்கும் என்று சில நேரங்களில் சரியான கவனிப்பைக் கொடுக்க மாட்டோம். பிக்மென்டேஷன் ஏற்படுவதற்கு இது மட்டும் காரணமல்ல. இதோடு வேறு பல காரணங்களும் உள்ளது. அவை என்னென்ன? எப்படி சரிசெய்ய முடியும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க:எப்போதும் இளமையாக இருக்க இந்த 5 ஸ்டைலிங் டிப்ஸைப் பின்பற்றுங்கள், உங்கள் வயதை யாராலும் யூகிக்க முடியாது!


சரும அழகைப் பாதிக்கும் கருந்திட்டுக்கள்:

மங்கு அல்லது கருந்திட்டுக்கள் முகத்தில் கன்னம், நெற்றி மற்றும் மூக்கின் மேல் பகுதியில் காணப்படும் ஒரு வகையான கருப்பு நிறத்தில் வரக்கூடிய படையாகும். ஒவ்வொருவரின் சருமத்தின் தன்மை மற்றும் நிறத்தைப் பொறுத்து கருந்திட்டுகளின் அடர்த்தி வேறுபடக்கூடும்.

pigementation

கருந்திட்டுக்கள் வரக்காரணம்:

உடலில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் இருப்பது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மாசு, சருமத்தில் இறந்த செல்கள் அப்படியே படிவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் கருந்திட்டுகள் ஏற்படுகிறது.

மேலும் படிக்க:இனி அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டாம் - உங்கள் சருமத்தை வீட்டிலேயே ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்

வில்வம் மற்றும் பால்:

பெண்களின் சருமத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளைப் போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் எத்தனையோ அழகுக் குறிப்புகளைப் பின்பற்றி இருக்கலாம். இவற்றில் ஒன்றான வில்வ காயைக் கொண்டு செய்யப்படும் மசாஜ். சிவாலயங்களில் கிடைக்கும் வில்வம் காய் அல்லது பழங்களைப் பெறவும்.

பயன்படுத்தும் முறை:

பின்னர் வில்வ காய்களைப் பாதியாக நறுக்கி அதனுள் உள்ள சதைகளை மட்டும் பிரித்தெடுக்கவும். மிக்ஸி ஜாரில் பால் மற்றும் வில்வம் காய் அல்லது வில்வ பழங்களின் சதைகளைச் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

இதை சருமத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்யவும். இவற்றை ஒரு 15 நிமிடங்களுக்குப் பின்னதாக வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும். இவற்றைத் தொடர்ச்சியாக வாரத்திற்கு இருமுறையாவது பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடன் இருக்க உதவியாக இருக்கும். இனி கருந்திட்டுகள் உள்ளது என்ற கவலை வேண்டாம் சிவாலயங்களுக்குச் சென்று வில்வ காய்களை எடுத்து வாருங்கள் . எவ்வித செலவும் இல்லாமல் முகத்தைப் பொலிவாக்கலாம்.

மேலும் படிக்க:30 வயது பெண்களின் நரை முடியை கருகருன்னு மாற்றும் பீட்ரூட் ஹேர் டை-வீட்டில் செய்வது எப்படி?


வில்வ பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி 1, தயாமின், கரோட்டின், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால் உடல் ஆரோக்கியம் முதல் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்புடன் வைத்திருக்க உதவுகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP