திருமணமான பெண் தாய் வீட்டிலிருந்து இந்த 8 பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது


Alagar Raj AP
22-11-2024, 13:36 IST
www.herzindagi.com

    திருமணமான பெண் திருமணம் முடிந்த பிறகு புகுந்த வீட்டிற்கு செல்வது வழக்கம். அதன் பின் பிறந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதும் வழக்கம். அப்படி புகுந்த வீட்டிற்கு வந்து செல்லும் போது சாஸ்திரங்கள் படி சில பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

கூர்மையான பொருட்கள்

    தாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு அரிவாள்மனை, கத்தி, ஊசி உள்ளிட்ட கூர்மையான பொருட்களை எடுத்து செல்ல கூடாது. இது இருவீட்டு உறவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

விளக்குகள்

    தாய் வீட்டில் பயன்படுத்திய விளக்குகளை எடுத்து சென்றால் இரு வீட்டிலும் லட்சுமி கடாட்சம் வெளியே சென்று விடும்.

துடைப்பம்

    துடைப்பத்தை தாய் வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு எடுத்து வந்தால் அங்கு இருக்கும் பிரச்சனைகள் புகுந்த வீட்டில் உள்ளவர்களையும் பாதிக்கும். இதனால் துடைப்பம் உள்ளிட்ட சுத்தம் செய்யும் பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம்.

அரிசி அளக்கும் படி

    அரிசி அளக்கும் படியை தாய் வீட்டில் இருந்து எடுத்து சென்றால் இரு வீட்டாரும் வறுமையில் பாதிக்கப்படுவார்கள் என்பது சாஸ்திரம்.

கசப்பான உணவுகள்

    பாகற்காய், சுண்டைக்காய், முருங்கை கீரை உள்ளிட்ட கசப்பான உணவுகளை எடுத்து செல்லக் கூடாது. இதனால் இரு வீட்டிற்கும் மனக்கசப்பு உண்டாகும்.

மாமிச உணவுகள்

    தாய் வீட்டில் இருந்து மாமிச உணவுகளை எடுத்து வரக்கூடாது. இதனால் காத்து கருப்பு அடிக்கும் என்று கூறுவார்கள்.

கோலமாவு

    கோலமாவை தாய் வீட்டில் இருந்து எடுத்து வரக்கூடாது. இதனால் தாய் வீட்டில் உள்ள லட்சுமி கடாட்சம் வெளியேறும், புகுந்த வீட்டில் மகாலட்சுமி குடியேறாதது.

ஈரத்துணிகள்

    தாய் வீட்டில் இருந்து ஈரமான துணிகளை மற்றும் துவைத்த துணிகளை எடுத்து செல்ல கூடாது. இதனால் எம பயத்தை உண்டு பண்ணும், செல்லும் வழியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படலாம்.