இந்த மாதம் திரையில் மோதும் இரண்டு சூப்பர் ஸ்டார் படங்கள்!
Alagar Raj AP
06-02-2024, 14:34 IST
www.herzindagi.com
யாத்ரா 2
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள யாத்ரா 2 பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது. ஜெகன் மோகன் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். மம்முட்டி ராஜசேகர ரெட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லால் சலாம்
விஷ்ணு விஷால் கதாநாயகனாகவும், ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால் சலாம் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகிறது.
லவ்வர்
குட் நைட் கதாநாயகன் மணிகண்டன் நடிப்பில் ரொமான்டிக் படமாக உருவாகி உள்ள லவ்வர் திரைப்படம் பிப்ரவரி 9 திரையரங்கில் வெளியாகிறது.
ஈகிள்
தெலுங்கு திரையுலகின் மாஸ் மகாராஜா என்று அழைக்கப்படும் ரவி தேஜாவின் ஈகிள் திரைப்படம் பிப்ரவரி 9 அன்று வெளியாகிறது.
பிரம்மயுகம்
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிப்பில் திகில் கதைக்களத்தில் உருவாகி உள்ள பிரம்மயுகம் திரைப்படம் பிப்ரவரி 15ல் வெளியாகிறது.
தி பாய்ஸ்
இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் பொய்க்கால் குதிரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கி நடித்திருக்கும் தி பாய்ஸ் திரைப்படம் பிப்ரவரி 15ல் வெளியாகிறது.
சைரன்
ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் பிப்ரவரி 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.