'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியில் பங்கேற்கும் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்!
Alagar Raj AP
17-05-2024, 12:00 IST
www.herzindagi.com
சைத்ரா ரெட்டி
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார்.
சாய் தீனா
தமிழ் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர காதாபாத்திரத்திலும் நடித்து புகழ்பெற்ற சாய் தீனா டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார்.
சோனியா அகர்வால்
காதல் கொண்டேன், 7G ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற சோனியா அகர்வால் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார்.
நரேந்திர பிரசாத்
கல்லூரி சாலை, முயற்சி பண்றோம், கதைபோமா உள்ளிட்ட யூடியூப் தொடர்களில் நடித்து இளசுகளின் மனதை கவர்ந்த நரேந்திர பிரசாத் போட்டியாளராக பங்கேற்கிறார்.
ஐஸ்வர்யா தத்தா
பிக் பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ஐஸ்வர்யா தத்தா தற்போது சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு தாவியுள்ளார்.
சிங்கம்புலி
திரைப்பட இயக்குனரும், காமெடி நடிகருமான சிங்கம்புலி ஒன்பது போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்கிறார்.
ஷாலி நிவேகாஸ்
இதற்கு முன் சன் டிவியின் ஒளிபரப்பான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த ஷாலி நிவேகாஸ் இந்த முறை சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கிறார்.
ஃபெப்சி விஜயன்
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட படங்களில் ஸ்டண்ட் கலைஞராகவும் நடிகராகவும், தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்குனராகவும் பணியாற்றிய ஃபெப்சி விஜயன் போட்டியாளராக பங்கேற்கிறார்.
சுஜாதா சிவகுமார்
விருமாண்டி முதல் சமீபத்தில் வெளியான ரசவாதி வரை தமிழில் பல படங்களில் நடித்தும், விஜய் டிவியில் மகாநதி சீரியலில் தற்போது நடித்து வரும் சுஜாதா சிவகுமார் போட்டியாளராக பங்கேற்கிறார்.