சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை கொடுத்த நலன் குமாரசாமி நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் முதல் சீசனில் முதல் பரிசு வென்றுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ்
தொடர்ந்து பெரிய ஹீரோக்களை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இரண்டாவது பரிசு வென்றிருக்கிறார்.
மடோன் அஸ்வின்
யோகி பாபு மற்றும் சிவகார்த்திகேயன் கேரியரில் முக்கிய படமான மண்டேலா மற்றும் மாவீரன் படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் நாளைய இயக்குனர் மூலம் என்ட்ரி கொடுத்தவர்.
மணிகண்டன்
காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படத்தின் இயக்குனரும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்.
ராம்குமார்
நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இருந்து சினிமாவுக்கு கிடைத்த இயக்குனர்களில் ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமாரும் ஒருவர்.
அல்போன்ஸ் புத்திரன்
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் நாளைய இயக்குனர் ஷோ மூலம் சினிமாவுக்கு வந்தவர்.
அருண்ராஜா காமராஜ்
கானா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
ஸ்ரீ கணேஷ்
8 தோட்டாக்கள் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
விஜய் குமார்
நாளைய இயக்குனர் முதல் சீசனில் உறியடி படத்தின் இயக்குனர் விஜய் குமார் போட்டியாளராக இருந்துள்ளார்.
நித்திலன் சுவாமிநாதன்
மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் 3வது சீசனில் பங்கேற்றுள்ளார்.
ரவிக்குமார்
அயலான் படத்தின் இயக்குனர் ரவிக்குமார் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் 2வது சீசனில் பங்கேற்றுள்ளார்.
பாலாஜி மோகன்
தனுஷின் மாரி திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி மோகனும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து
டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவும் நாளைய இயக்குனர் ஷோ மூலம் சினிமாவில் அறிமுகமானவர்.