பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் உச்சம் தொட்ட பிரபலங்கள்
Alagar Raj AP
03-10-2024, 18:33 IST
www.herzindagi.com
பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 7 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் மொத்தம் 136 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்களில் சிலர் மட்டுமே சினிமாவில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஜொலித்துள்ளனர். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹரிஷ் கல்யாண்
சிந்து சமவெளி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தாலும் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்ற பின் கிடைத்த பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி தற்போது நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் நாயகனாக உள்ளார்.
ஆரவ்
ஆரம்பத்தில் மாடலிங் துறையில் இருந்த ஆரவ் சீசன் 1ல் பங்கேற்று வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கழகத் தலைவன் படத்தில் வில்லனாக நடிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திருப்பர். தற்போது இவர் அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கவின்
சின்னத்திரையில் நடித்து வந்த கவின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக பங்கேற்றார். அதன் பின் இவர் நடித்த சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாவிட்டாலும் லிஃப்ட், டாடா, ஸ்டார் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நாயகனாக மாறினார்.
இவர்ளை தவிர மற்றவர்களுக்கு சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, சிலருக்கு வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தவில்லை.
பிக் பாஸ் சீசன் 8
தற்போது தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 8ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.