ஓடிடியில் பார்க்க வேண்டிய பெண்களை மையப்படுத்திய சிறந்த மலையாள படங்கள்


Alagar Raj AP
06-03-2024, 14:00 IST
www.herzindagi.com

உயிரே, 2019

    விமானி ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் பல்லவி என்னும் கதாபாத்திரத்தில் பார்வதி திருவோடு நடித்திருக்கிறார். ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பல்லவி அதன் பிறகு எப்படி விமானி ஆனாரா என்பது இந்த படத்தின் கதை. இந்த படம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைமில் உள்ளது.

ஆயிஷா, 2023

    பழம்பெரும் மலையாள நடிகையான நிலம்பூர் ஆயிஷாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஆயிஷா கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ளது.

சேஷம் மைக்கேல் பாத்திமா, 2023

    கால்பந்து வர்ணனையில் ஆர்வம் கொண்ட பாத்திமா நூர்ஜஹான் என்ற கதாபாத்திரத்தில் கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். தன் குடும்பம் மற்றும் சமூக நெறிமுறைகளின் எதிர்ப்பை எதிர் கொண்டு தன் இலட்சியத்தை பாத்திமா நூர்ஜஹான் அடைந்தாரா என்பதை இந்த படத்தின் கதை. இந்த படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் இருக்கிறது.

ஹெலன், 2019

    வணிக வளாகத்தில் உணவக ஊழியராக பணியாற்றும் ஹெலன் என்ற கதாபாத்திரத்தில் அன்னா பென் நடித்திருப்பார். ஹெலன் உணவகத்தின் உறைவிப்பான் அறையில் சிக்கி எப்படி உயிர் பிழைத்தார் என்பது இந்த படத்தின் கதை. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ளது.

நீரஜா, 2023

    திருமணமான முதல் வருடத்திலேயே கணவர் உயிரிழக்க, அதன் பின் மனைவி உடல் ஆசைகளை அடக்கிக் கொள்ள முடியாமல் சமூக கட்டமைப்புகளை கடந்து அவள் எடுக்கும் முடிவுகளே இந்த படத்தின் கதை. HR எனும் மலையாள ஓடிடியில் இந்த படம் உள்ளது. இந்த படம் நாதிச்சரமி எனும் ரீமேக் ஆகும்.

தி கிரேட் இந்தியன் கிச்சன், 2021

    திருமணமான புதுமண பெண் புகுந்த வீட்டில் தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் சந்திக்கும் பிரச்சனைகளே இந்த படம். இப்படத்தை அமேசான் பிரைமில் காணலாம்.

சூப்பர் சரண்யா, 2022

    சரண்யா என்ற பெண் தன் சிறிய நகரத்தை விட்டு, திருச்சூரில் பொறியியல் கல்லூரியில் சேர்கிறார். அங்கு அவர் வாழ்க்கையில் நடக்கும் ஏற்ற தாழ்வுகளே இந்த படத்தின் கதை. ஜீ5 ஓடிடியில் இந்த படம் உள்ளது.