கன்னட ஹீரோ உபேந்திராவின் 7 சிறந்த படங்கள்


Alagar Raj AP
23-12-2024, 17:04 IST
www.herzindagi.com

உபேந்திரா

    உபேந்திரா கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகராவார். இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என கன்னட சினிமாவில் ஆல் ரவுண்டராக திகழும் உபேந்திராவின் சிறந்த 7 படங்கள் குறித்து காண்போம்.

Tharle Nan Maga (1992)

    ‘Tharle Nan Maga’ உபேந்திரா இயக்குனராக அறிமுகமான முதல் படமாகும். 90களில் நிலவிய சமூகப் பிரச்சினைகளை பேசிய இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Shhh! (1993)

    உபேந்திரா இயக்கத்தில் வெளியான ‘Shhh!’ கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும்.

Om (1995)

    உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ் குமார் ஹீரோவாக நடித்திருந்த 'Om' திரைப்படம் பெங்களூரு நிழலுலக தாதாக்களை பற்றிய ஆக்‌ஷன் க்ரைம் திரைப்படமாகும்.

A (1998)

    உபேந்திரா இயக்கி நடித்திருந்த ‘A’ திரைப்படம் காதல், கோபம் போன்ற மனித உணர்வுகளை கலந்து திரில்லர் பாணியில் உருவான படமாகும்.

Upendra (1999)

    மனித உணர்வுகளை பற்றிய உளவியல் த்ரில்லர் படமான 'Upendra' படத்தில் நடிகர் உபேந்திரா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

Hollywood (2002)

    தன்னை போல் ஒரு ரோபோவை உருவாக்கி அதனால் ஏற்படும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கூறும் படம் தான் ‘Hollywood.’ இப்படத்தில் உபேந்திரா திரைக்கதை எழுதி நடித்திருப்பார்.

Super (2010)

    இந்தியாவின் சமகால அரசியல் பிரச்சினைகளை பேசிய இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்திருப்பார்.