துலாபாரம் வழிபாட்டில் எந்த பொருட்களை கொடுத்தால் என்ன பலன்?
Alagar Raj AP
04-12-2024, 15:39 IST
www.herzindagi.com
துலாபாரம்
இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் துலாபாரம் வழிபாடு. துலாபாரம் என்பது கடவுளிடம் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறிய பின் கொடுக்கும் காணிக்கை. அல்லது ஒருவரின் பிரார்த்தனைகள் நிறைவேற கொடுக்கப்படும் தானமாகும்.
துலாபாரம் கொடுப்பது எப்படி?
துலாபாரம் என்றால், ஒருவரைத் தராசின் ஒருபுறம் உட்கார வைத்து அவரின் உடல் எடைக்கு நிகரான பொருட்களை எடை போட்டு இறைவனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அப்படி துலாபாரம் வழிபாட்டில் எந்த பொருட்களை கொடுத்தால் என்ன பலன் என்பதை பார்ப்போம்.
பழங்கள்
குழந்தை பாக்கியத்திற்காக துலாபாரம் தருவதாக வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டியபடி குழந்தை பாக்கியம் கிடைத்தால் குழந்தையின் எடைக்கு நிகராக பழங்களை துலாபாரம் கொடுக்கலாம்.
எள்
ஏழரை சனியால் அவதிப்படுபவர்கள் சனி பகவானுக்கு உகந்த உணவான எள்ளை உங்கள் உடல் எடைக்கு நிகராக துலாபாரம் கொடுத்தால் சனியின் தாக்கம் குறையும்.
நெய்
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் உடல் எடைக்கு நிகராக நெய் துலாபாரம் கொடுத்தால் உடலில் இருக்கும் நோய் தீரும் என்பது ஐதீகம்.
குங்குமம்
கன்னிப் பெண்கள் தங்கள் உடல் எடைக்கு நிகராக குங்குமம் துலாபாரம் கொடுத்தால் நல்ல கணவர் அமைவார் என்பது ஐதீகம்.
அரிசி
அரசியை உடல் எடைக்கு நிகராக துலாபாரம் கொடுக்கும் போது செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
கோதுமை
அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கோதுமை துலாபாரம் கொடுத்தால் கடன் தொல்லை நீங்கும் என்பது ஐதீகம்.
மஞ்சள்
மஞ்சள் துலாபாரமாக கொடுத்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கும் என்பது ஐதீகம்.