காதலர் தின ஸ்பெஷல்! இதய வடிவில் கேக் செய்வது இவளோ சுலபமா!


Sanmathi Arun
08-02-2023, 13:01 IST
www.herzindagi.com

காதலர் தின ஸ்பெஷல்

    காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவரின் இதயத்தை மகிழ்விக்க இதய வடிவிலான கேக் செய்து அசத்துங்கள். எப்படி செய்வது என்று இங்கு காணலாம்.

Image Credit : freepik

தேவையான பொருட்கள்

  • மைதா - 2 1/2 கப்
  • பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்
  • பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்
  • கொக்கோ பவுடர் - 2 ஸ்பூன், உப்பு - 1/2 ஸ்பூன்
  • ஆயில்- 1 கப், சர்க்கரை - 2 கப்
  • முட்டை - 4, தயிர் - 1 கப்
  • வெண்ணிலா எசன்ஸ் - 2ஸ்பூன் , வினிகர் - 1 ஸ்பூன்
  • சிவப்பு நிற உணவு வண்ணம் - 2 ஸ்பூன்

Image Credit : freepik

ஸ்டெப் 1

    அடுப்பை 350 டிகிரி F (175 டிகிரி C) க்கு முன்கூட்டியே சூடாக்கி கொள்ளவும். மோல்டில் சிறிது எண்ணெய் தடவி பின்பு மாவு கொஞ்சம் தூவி க்ரீஸ் செய்து கொள்ளவும்

Image Credit : freepik

ஸ்டெப் 2

    ஒரு கிண்ணத்தில், மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு மற்றும் கொக்கோ பவுடர் ஆகியவற்றை கலந்து வைத்து கொள்ளவும்

Image Credit : freepik

ஸ்டெப் 3

    மற்றொரு பெரிய கிண்ணத்தில், எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பின்பு முட்டைகளை சேர்க்கவும். தயிர், வெண்ணிலா எசன்ஸ், வினிகர் மற்றும் உணவு வண்ணம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 4

    முதலில் எடுத்து வைத்துள்ள மாவு, பேக்கிங் பவுடர் போன்ற கலவையை இதில் சேர்த்து நன்கு கலக்கவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 5

    தயாரிக்கப்பட்ட மாவை இதய வடவில் இருக்கும் மோல்டில் ஊற்றி 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 6

    தயாரான பின்பு கேக்குகளை 10 நிமிடங்களுக்கு ஆற வைக்கவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 7

    சூடு குறைந்த பின்பு கேக்குகளை உங்களுக்கு பிடித்த கிரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங்குடன் ஃப்ரோஸ்ட் செய்து மகிழவும்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : freepik