ஆரோக்கியம் நிறைந்த சுவரொட்டி வறுவல் செய்வது எப்படி!!!


Sreeja Kumar
30-12-2022, 10:57 IST
www.herzindagi.com

சுவரொட்டி

    ஆட்டு மண்ணீரல் ’சுவரொட்டி’ என அழைக்கப்படுகிறது. இது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க சுவரொட்டியை வாரம் ஒருமுறை சாப்பிடலாம். ஆரோக்கியம் நிறைந்த ’சுவரொட்டி வறுவல்’ செய்முறை இதோ உங்களுக்காக.

Image Credit : Google

சுத்தம் செய்யும் முறை

    வெந்நீரில் சுவரொட்டியை போட்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் அப்படியே விடவும். பின்பு அதை வெளியில் எடுத்து மேற்புற தோலை மட்டும் நீக்கி, சுவரொட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

Image Credit : Google

தேவையான பொருட்கள்

  • சின்ன வெங்காயம் – 10
  • சோம்பு – சிறிதளவு
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
  • எண்ணெய் - தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்

Image Credit : Google

ஸ்டெப் 1

    முதலில் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Image Credit : Google

ஸ்டெப் 2

    பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 3

    இப்போது சுவரொட்டி துண்டுகளை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 4

    பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி, தண்ணீர் சேர்க்காமல் அப்படியே பாத்திரத்தை மூடி 10 நிமிடம் வேக விடவும்.

Image Credit : freepik

ஸ்டெப் 5

    இப்போது சுவரொட்டி நன்கு வெந்து நிறம் மாறியிருக்கும். இறுதியாக அதில் மிளகு தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஆரோக்கியம் நிறைந்த சுவரொட்டி தயார்.

Image Credit : freepik

படித்ததற்கு நன்றி

    நீங்களும் இந்த சுவரொட்டி வறுவலை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit : freepik