கண்ணைக் கவரும் சிவப்பு நிறத்தில் மொறு மொறு சுவையுடைய இந்த சிக்கன் 65ஐ நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறுடன் பரிமாறினால், வேண்டாமென சொல்ல, மனசு வருமா? முடிந்தால் இந்த சன்டே குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிக்கன் 65 செய்து கொடுங்கள். வெறும் 15 நிமிடங்களே போதுமானது.
Image Credit : freepik
தேவையான பொருட்கள்
சிக்கன் - 320 கிராம்
தயிர் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
மிளகு தூள் - ½ டீஸ்பூன்
சீரக தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சிவப்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
Image Credit : freepik
தாளிக்க தேவையானவை
எண்ணெய் /நெய் - 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 3
நறுக்கிய பூண்டு - 8
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு மற்றும் மிளகு தூள் - தேவையான அளவு
Image Credit : freepik
ஸ்டெப் – 1
முதலில் சிக்கனை சிறிதளவு உப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். தண்ணீரை நன்கு வடித்த பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
Image Credit : freepik
ஸ்டெப் – 2
பின்பு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, மிளகு தூள், சீரக தூள், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் – 3
இப்போது வெட்டிய சிக்கன் துண்டுகளைத் தயார் செய்து வைத்துள்ள மசாலாவுடன் சேர்த்து, நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் – 4
பின்பு ஊறிய சிக்கனில் அரிசி மாவு சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் – 5
இப்போது அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கன் துண்டுகளை போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் – 6
அடுத்து டிஷ்யூ பேப்பரை தட்டில் விரித்து, அதன் மேல் பொரித்த சிக்கன் துண்டுகளைப் போடவும். இப்படி செய்தால் சிக்கனில் இருக்கும் மிகுதியான எண்ணெய் டிஷ்யூவில் உறிஞ்சப்படும்.
Image Credit : freepik
ஸ்டெப் – 7
பின்பு மற்றொரு கடாயில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து தாளிக்கவும்.
Image Credit : freepik
ஸ்டெப் – 8
இந்த தாளிப்பை பொரித்து வைத்துள்ள சிக்கன் மீது சேர்த்து ஒன்றோடு ஒன்று சேரும்படி கலந்து விடவும். சூப்பரான சிக்கன் 65 தயார். இதை சூடாகப் பரிமாறினால் 5 நிமிடத்தில் தட்டு காலி ஆகிவிடும்.
Image Credit : freepik
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.