நமது பாரம்பரிய பண்டிகைகளில் பொங்கலும் ஒன்று. பண்டிகைக்கு புத்தாடை அணிவதோடு, அன்றைய பாரம்பரிய உணவை சாப்பிடவும் மிகவும் ஆவலுடன் இருப்போம். பொங்கல் அன்று செய்யப்படும் 5 பரம்பரிய உணவுகளைப் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
Image Credit : freepik
சர்க்கரை பொங்கல்
வாயில் போட்ட உடனே கரைந்து விடும் இந்த சர்க்கரை பொங்கல் வீட்டில் உள்ள அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கும். குறிப்பாக இதில் சேர்க்கப்படும் முந்திரி மற்றும் திராட்சைகளை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வதற்கு அரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் மற்றும் நெய் முக்கியமாக தேவைப்படுகிறது.
Image Credit : freepik
வெண்பொங்கல்
வீடுகளில் சர்க்கரை பொங்கலுடன் வெண்பொங்கல் செய்வதும் வழக்கம். இனிப்பு சுவை விரும்பாதவர்களுக்கு ஏற்றது இந்த பொங்கல். நெய்யில் வறுத்த மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் என இதில் சேர்க்கப்படும் ஒவ்வொரு பொருட்களும் வெண்பொங்கலுக்கு கூடுதல் சுவை தரும்.
Image Credit : freepik
மெது வடை
ஊற வைத்த உளுந்தை பக்குவமாக அரைத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுப்பதும் ஒரு கலை தான். இந்த மெதுவடை வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உட்புறம் மிருதுவாகவும் இருக்கும். பொங்கல் மற்றும் சாம்பாருடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
Image Credit : freepik
7 காய் கூட்டு
இந்த பருவ காலத்தில் கிடைக்க கூடிய காய்கறிகளை பயன்படுத்தி இந்த கூட்டு செய்யப்படுகிறது. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு 5, 7 அல்லது 9 காய்கறிகளைக் கொண்டு இந்த கூட்டை செய்யலாம். இதை பொங்கலுக்கு ஏற்ற பெஸ்ட் காம்பினேஷன் என்றும் சொல்லலாம்.
Image Credit : freepik
சாம்பார்
பொங்கல், வடை சாம்பார் இன்றி நிறைவடையாது. அதிலும் அரைத்து விட்ட டிபன் சாம்பார் பொங்கலுடன் சாப்பிட சுவையாக இருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக்கொள்ளலாம்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.