star ambur biryani: வீட்டிலேயே செய்யலாம் ஆம்பூர் ஸ்டார் பிரியாணி!
Sreeja Kumar
02-12-2022, 15:13 IST
www.herzindagi.com
ஆம்பூர் என்றால் உணவுப் பிரியர்களுக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது ஆம்பூர் பிரியாணி தான். சீரக சம்பா அரிசியில், சிக்கன் அல்லது மட்டன் சேர்த்து மணக்க மணக்க செய்யப்படும் இந்த பிரியாணியை நினைக்கும் போதே நாவில் எச்சில் ஊறும்.
Image Credit : pinterest
ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி சாப்பிடுவதற்கு ஓவ்வொரு முறையும் ஆம்பூர் சென்று வர முடியுமா என்ன? வீட்டிலேயே அதை செய்யக் கற்றுக்கொண்டால், தோணும் போதெல்லாம் செய்து சாப்பிடலாம். முடிந்தால் இந்த வாரம் சண்டே ஸ்பெஷலாக ஆம்பூர் ஸ்டார் பிரியாணியை வீட்டிலேயே செய்து அசத்துங்களேன், இதோ செய்முறை.
Image Credit : pinterest
தேவையான பொருட்கள்
சீரகசம்பா அரிசி - 1 கப்
சிக்கன் அல்லது வேகவைத்த மட்டன் - 250 கிராம்
பட்டை - 2
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
பிரிஞ்சி இலை - 2
வெங்காயம் - 2
சிவப்பு மிளகாய் விழுது - 1/2 கப்
தக்காளி - 2
புதினா-ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
Image Credit : pinterest
ஸ்டெப் 1
தம் வைப்பதற்கு ஏற்றார் போல் பெரிய அடிகனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.பின்பு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
Image Credit : pinterest
ஸ்டெப் 2
அதனுடன் 10 நிமிடம் ஊறவைத்து அரைத்த சிவப்பு மிளகாய் விழுதை சேர்த்து கலந்து விடவும்.பிறகு, சிக்கன் அல்லது வேகவைத்த மட்டன் சேர்த்து வதக்கவும்.கறி வதங்கியதும், அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்க வேண்டும்.
Image Credit : pinterest
ஸ்டெப் 3
மற்றொரு அடுப்பில் தண்ணீருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.கொதி வந்ததும், அதில் சீரக சம்பா அரிசியை சேர்த்து, பாதி பதத்திற்கு வேகவைத்து, வடித்துக் கொள்ளவும். அரிசியை அதிக நேரம் சமைத்தால் பிரியாணி குழைந்துவிடும்.
Image Credit : pinterest
ஸ்டெப் 4
பாத்திரத்தில் கறி வெந்து வந்ததும் அதில் எலுமிச்சை சாறு மற்றும் வடித்த அரிசியை சேர்க்கவும்.தண்ணீர் முழுவதும் வற்றி இருந்தால், தேவைக்கு ஏற்ப ½ கப் சுடு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.பிரியாணி வெந்து மேலே வரத் தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு தம் போட வேண்டும்.
Image Credit : pinterest
தம் வைக்கும் முறை
நீங்கள் விறகு அடுப்பில் செய்தால், பிரியாணி மூடி வைத்திருக்கும் தட்டின் மீது எரிந்த விறகுகளை வைத்து 10 நிமிடம் தம் போடலாம். கேஸ் அடுப்பில் செய்பவர்கள், பாத்திரத்தை மூடி அதன் மேல் கொதிக்கும் சுடு தண்ணீரை வைத்து 10 நிமிடத்திற்கு தம் போடவும். இப்போது சுவையான ஆம்பூர் ஸ்டார் பிரியாணி தயார்.
Image Credit : pinterest
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.