சமையலறை வேலை பார்க்க சுலபமாக தெரிந்தாலும் அதை செய்வது எவ்வளவு கடினம் என்பது பெண்களுக்கு மட்டுமே புரியும். உங்கள் வேலையை சுலபமாக மாற்றக்கூடிய சில எளிய குறிப்புகளை இன்றைய பதிவில் காணலாம்.
Image Credit : freepik
குக்கரில் தண்ணீர் கசியாமல் இருக்க
பருப்பு அல்லது காய்கறிகளை வேக வைக்கும் பொழுது தண்ணீர் வெளியே கசிகிறதா? ஒரு சிறிய ஸ்டீல் கிண்ணத்தை குக்கருக்குள் வைத்து மூடினால் தண்ணீர் வெளியே வராமல் இருக்கும்.
Image Credit : freepik
முருங்கைக்காய்
முருங்கை காயை வாங்கி வந்த உடனே அதனை கழுவி துடைத்து சுத்தம் செய்த பின்னர், அதை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு காற்று புகாத பாட்டிலில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம். இப்படி செய்தால் முருங்கைக்காய் ஒரு மாதமானாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.
Image Credit : freepik
பருப்புகளை ஊற வைக்க மறந்தால்
பருப்பு அல்லது பயறு வகைகளை ஊற வைக்க மறந்து விட்டால், சூடான நீரில் ஊற வைத்து ஹாட் பேக்கில் சில நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். இப்படி செய்தால் பருப்பு/பயறு சீக்கிரம் ஊறிவிடும்.
Image Credit : freepik
உப்பு ஈரமாகாமல் இருக்க
உப்பு ஈரத்தன்மை சேர்ந்தது விட்டால் பயன்படுத்த கடினமாக இருக்கலாம். இதை தவிர்க்க உப்புடன் சிறிதளவு அரிசியை போட்டு வைக்கவும். இப்படி செய்தால் உப்பு ஈரமாவதை தடுக்கலாம்.
Image Credit : freepik
சட்னியின் நிறம் மாறாமல் இருக்க
பொதுவாக புதினா, கொத்தமல்லி போன்ற சட்னிகளை செய்யும் பொழுது நல்ல பச்சை நிறத்தில் இருக்கும். ஆனால் சிறிது நேரம் கழித்து இவற்றின் நிறம் மாறத் தொடங்கிவிடும். இதை தடுக்க சட்னியை அரைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் பயன்படுத்துங்கள்.
Image Credit : freepik
ஆப்பிள் கருப்பாகாமல் இருக்க
குளிர்ந்த நீரில் சிறிதளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கலக்கவும். வெட்டிய ஆப்பிள் துண்டுகளை இதில் முக்கி எடுத்து வைத்தால் நீண்ட நேரத்திற்கு பிரஷ்ஷாக கருப்பாகாமல் இருக்கும்.
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்த தகவல் பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.