உங்கள் குணாதிசயங்களை புட்டுபுட்டு வைக்கும் உங்களது கையெழுத்து
Alagar Raj AP
18-12-2024, 13:56 IST
www.herzindagi.com
குணாதிசயங்கள்
உடுத்தப்படும் உடை, வாரப்படும் தலைமுடி, பார்க்கும் பார்வை, பேசும் சொற்கள் ஆகிய புறத்தோற்ற அறிகுறிகள் மற்றும் அகநிலை அறிகுறிகள் ஒருவரின் குணாதிசயங்களை எப்படி வெளிப்படுத்துமோ அதே போல் எழுதும் கையெழுத்தும் உங்கள் குணாதிசயங்களை வெளிப்படுத்தும்.
கையெழுத்தியல்
கையெழுத்தியல் என்பது கையெழுத்து பகுப்பாய்வு ஆகும். அதாவது ஒருவரின் கையெழுத்துக்கும் குணாதசியத்திற்கும் இடையிலான தொடர்பை பற்றி ஆய்வு செய்வது தான் கையெழுத்தியல். நாம் இந்த பதிவில் ஒருவரின் கையெழுத்து என்ன குணாதிசியங்களை வெளிப்படுத்துகிறது என்ற அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்வோம்.
அழுத்தமான எழுத்துக்கள்
எழுத்துக்களை அழுத்தமாக எழுதுபவர்கள் அதிக மன அழுத்தம் அல்லது அதிக ஆற்றல் உடையவர்கள் என்று கூறப்படுகிறது.
லேசான எழுத்துக்கள்
எழுத்துக்களை அதிகம் அழுத்தம் இல்லாமல் லேசாக எழுதுபவர்கள் மிகவும் மென்மையான நபர்களாக இருப்பார்கள்.
வலது சாய்ந்த எழுத்துக்கள்
எழுத்துக்களை வலப் பக்கமாக சாய்த்து எழுதுபவர்கள் எதிர்காலத்தைப் பற்றி அஞ்சுபவர்களாக இருப்பார்கள் அல்லது நட்புறவு மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இடது சாய்ந்த எழுத்துக்கள்
எழுத்துக்களை இடது பக்கமாக சாய்த்து எழுதுபவர்கள் தனிமையை உணர்ச்சிகளை அனுபவிப்பவர்கள் அல்லது இயல்பான நபராக இருப்பார்கள்.
இடைவெளி உள்ள எழுத்துக்கள்
எழுத்துக்களை இடைவெளி விட்டு எழுதுபவர்கள் அவசர புத்தி உள்ளவர்களாக இருப்பார்கள் அல்லது சுதந்திரமாக செயல்பட விரும்புவர்களாக இருப்பார்கள்.
குண்டு குண்டான எழுத்துக்கள்
எழுத்துக்களை குண்டு குண்டாக பெரிதாக எழுத்துவபவர்கள் தாராள மனம் மற்றும் இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.